பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
149

149

ஒதுக்கத் தலைப்பட்டனர். தமிழில் கலக்கப்பட்டிருந்த பிற மொழிச் சொற்களையெல்லாம் விளக்கி, அவ்விடங்களில் தூய தமிழ் சொற்களை இடம்பெறச் செய்வதில் பெரும் முனைப்புக் காட்டினர். தமிழில் கலந்திருந்த வேற்று மொழிச் சொற்களுக்கு நிலையான தமிழ்ச்சொற்களை பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து தேடிக்கொணர்ந்து சேர்க்கும் புதுப் போக்கு வேகமுடன் செயல் படலாயிற்று.

இதற்காகத் தமிழில் கலந்துள்ள ஆங்கிலம், வடமொழிச் சொற்களைத் தமிழாக மொழிபெயர்த்துப் பயன்படுத்தும் முயற்சி பெருமளவில் பலராலும் பரவலாகக் கையாளப்பட்டது இயலாத போது புதிய கலைச் சொற்களை உருவாககுவதிலும் பேரார்வம் காட்டினர். இலக்கியத்துறை மட்டுமல்லாது, அறிவியல் துறைத் தொடர்புடைய கலைச்சொற்களும் இவ்வகையிலே உருவாக்கப் படலாயின.

மொழித் தூய்மையும் கருத்துச் சிதைவும்

இலக்கியக் கலைச்சொற்களில் தூய்மை பேணுவதைப் போல் அறிவியல் சலைச் சொற்களில் தூய்மையைக் கடைப் பிடிப்பதால் அக் கலைச் சொற்கள் பொருளுணர்த்தும் போக்கில் கருத்துச் சிதைவும் பொருட் குழப்பமும் ஏற்பட ஏதுவாகின்றது. அறிவியல் கலைச் சொற்களைப் பொருத்தவரை மொழித் தூய்மை ஓரளவே க்டைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து தெளிவது நலம்.

ஆயினும் சிலர் விடாப்பிடியாகத் தமிழைக் கலப்பேதும் இல்லாத தூய மொழியாகக் கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். அறிவியல், தொழில் நுட்பக் கலைச் சொற்களிலும் இதே தூய்மை நிலையே இருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். இவர்கள் கருத்துணர்த்தும் போக்கைவிட மொழிச் சொல் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும், கிரந்த எழுததுகளை அறவே விலக்கி, தொல்காப்பிய தமிழ் ஒலிப்பு முறையை முற்றாகப் பின்பற்றிக் கலைச் சொல்லாக்கம் செய்ய வேண்டும் என்பது இவர்தம் உள்ளக்கிடக்கை ஆகும். இத்தூய்மைக் கொள்கை, கலைச்சொல்லாக்கத்தைப் பொருத்த வரை ஓரளவுக்குப் பொருத்தமுடையதாக இருக்க முடியுமே தவிர முற்றப் பொருந்துவதாகாது, ஏனெனில், அறிவியலைப் பொருத்த வரை உணர்ச்சியைக் கட்டிலும் அறிவுக்கே முதலிடம் என்

பதை உணர வேண்டும்.