பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
152

152

தமிழ்ச் சொல்லுடன் சமஸ்கிருதச் சொல் அல்லது ஆங்கிலச் சொல்லை இணைத்துக் கலைச் சொல்லை உருவாக்கிக் கொள்ளலாம்.

மூன்றாவதாக, தமிழில் மூலச் சொல்லாகவோ அன்றி மொழி பெயர்ப்புச் சொல்லாகவோ கலைச் சொல் அமைய இயலாவிடில் ஆங்கில மூலக் கலைச்சொல்லையே ஒலி பெயர்ப்பாகப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பது அவர் கலைச் சொல்லாக்கத்திற் கென வகுத்துக் கொண்ட நெறியாகும். இதற்கென கிரந்த எழுத் துக்களைப் பயன்படுத்துவதையும் ஏற்புடையதென்றே கருதி னார். அன்னார் மேற்கொண்டிருந்த கலைச் சொல்லாக்க விதி முறைக் கொள்கை இன்றுவரைம்கூட பினபற்றத்தக்கதாக விளங்கி வருவது அவரது ஆழ்ந்த சிந்தனைத் தெளிவை வெளிப்படுத்துவதாகவுள்ளது.

டாக்டர் ஃபிஷ் கிறீன் மொழிபெயர்த்த இரண வைத்தியம். கெமிஸ்தம் ஆகிய நூல்களில்தான் கொண்டிருந்த சொல்லாக்கக் கோட்பாடுகளைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

முதல் கலைச்சொல்லாக்கத் தொகுதிகள்

ஃபிஷ் கிறீன் 1875ஆம் ஆண்டில் எஸ். சுவாமிநாதன், சாப் மன் போன்றோரின் உறுதுணையுடன் மருத்துவத்துறை தொடர் பான நான்கு கலைச் சொல் தொகுதிகளை வெளியிட்டு கலைச் சொல்லாக்க முயற்சிகளுக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார், ஃபிஷ் கிறீன் தமிழில் எழுதி வெளியிட்ட மருத்துவம் தொடர்பான நூல் களின் மொத்தப் பக்கங்கள் 4,500 எனக் கூறப்படுகிறது.

இதன் பிறகு 1888 ஆம் ஆண்டில் 'மனோன்மணியம்' ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை கணிதம், மருத்துவம், இரசாயனம் மற்றும் தத்துவம் பற்றிய நூற்றொகை விளக்கம்’ எனும் நூலில் அறிவியல் தொடர்பான கலைச் சொற்கள் பலவற்றைக் கையாண்டுள்ளார்.

சொல்லாக்க முயற்சியை முடுக்கிய பயிற்சிமொழித் திட்டம்

இருபதாம் நூற்றாண்டி ன் தொடக்கத்தில் பள்ளிப் பாட மொழியாகத் தமிழை ஆக்கிய பிறகே அறிவியல் கலைச் சொற் களின் பெருக்கமான தேவை உணரப்பட்டது. அதுவும் உட னடித் தேவையாக அமைந்தது. எனவே, படிக்கும் மாணவர் களுக்காக மட்டுமல்லாது, பாடப் புத்தகங்களை எழுதும் ஆசிரி யர்க்கும் உதவியாக இருக்கும் வகையில் கலைச் சொல்லாக்கக்

குழு ஒன்றை அரசாங்கம் அமைத்தது. 1928ஆம் ஆண்டில்