பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
153

158

சென்னை மாகாண கல்வி இயக்குநரால் அமைக்கப்பட்ட இக் குழுவேகலைச்சொல்லாக்கத்திற்கென அரசு சார்பில் அமைக்கப் பட்டதாகும். ஆனால், இக் குழுவினர் தயாரித்த கலைச்சொற் தொகுதி என்ன வாயிற்று என்றே தெரியவில்லை

தமிழின் பெயரால் ஆங்கில, சமஸ்கிருதக் கலைச் சொற்கள்

அதன்பின் 1982 ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துக் கலைச் சொற்களைத் தயாரித்துக் தொகுக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. இக்குழு முயன்று உழைத்து விஞ்ஞான இயல்களுக்கு மட்டுமல்லாது. வணிகம், பொருளாதாரம், அரசியல் போன்ற அனைத்துப் பாடங்களுக் கும் தேவையான கலைச்சொற்களைத் தயாரித்தளித்தது. சுமார் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட கலைச் சொற்களை இக்குழு உரு வாக்கிய போதிலும் அவற்றில் பெரும்பாலான கலைச் சொற்கள் ஆங்கிலக் கலைச் சொற்களின் ஒலி பெயர்ப்பாகவும் மற்றவை சமஸ்கிருதக் கலைச் சொற்களாகவுமே அமைந்திருந்தன. தமிழ்க் கலைச் சொற்களை தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய தாயிருந்தது. இக்குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் பலரும் ஆங்கில அறிவும் சமஸ்கிருதப் புலமையும் மிக்கவர்களாக இருந் தார்களே தவிர தமிழறிவு நிரம்பப் பெற்ற யாரும் இடம் பெற்ற தாகத் தெரியவில்லை.

சாதாரண கலைச் சொற்களுக்குக் கூட சமஸ்கிருத மொழி யில் விரிவான வியாக்கியானம் செய்யும் வகையில் கலைச் சொல்லாக்கம் கொடுக்கப்பட்டிருந்தது மிகவும் விந்தையாக வுள்ளது. சான்றாக, Census report" என்ற ஆங்கிலச் சொல் லுக்கு 'குல ஸ்திரீ புருஷபால விருத்த ஆயவ்யய பரிமாண பத்திரிகை எனக் கலைச் சொல் கொடுக்கப்பட்டிருந்தது. இத் தகைய நிலை நிலவியதற்குக் காரணம் அக்காலத்தில் சமஸ் கிருத மொழி, சமுதாயத்தில், அதிலும் படித்தவர்களிடத்தில் பெற்றிருந்த பெரும் செல்வாக்கின் விளைவேயாகும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு தமிழ்க் கலைச்சொற்கள் என்ற பெயரில் சமஸ் கிருதத்திற்கு முக்கியத்துவம் அளித்துவர் த போக்கு தமிழார்வலர் களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துவந்தது. அதிலும் அரசாங்கச் சார்பில் இத்தகைய போக்கு வளர்ந்து வருவதைக் கண்ணுற்று வேதனைப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் தமிழுக்கு மட்டுமே முதல் முக்கியத்துவம் தரும் வகையில் கலைச் சொல் லாக்கப் பணி அமைவதைப்பற்றி முனைப்பாகச் சிந்திக்கத் தொடங்கின. அதன் விளைவாக 1984 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்' என்ற அமைப்பு உருவாகியது.