பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
155

155

தெளிவு ஆகியவற்றைக் காட்டிலும் மொழித்துய்மைக்கே முதலிடம் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டுப் பாடநூல் கிறுவன முயற்சி

தமிழகப் பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டத்தை அரசு முனைப்புடன் மேற்கொள்ள விழைந்ததால் 1959ஆம் ஆண்டில் மீண்டும் தமிழில் கலைச் சொற்களை உரு வாக்குவதற்கென புதிய வல்லுர் குழுவொன்றை அமைத்தது. இக்குழுவினர், அறிவியல், கலைப் பாடங்கள் அனைத்துக்கு மாகக் கலைச் சொற்களை உருவாக்கி, துறைக்கொரு தொகுதி யாகத் தமிழ்க் கலைச்சொல் பட்டியலை வெளியிட்டது. இதிலும் சமஸ்கிருதமும் ஆங்கில ஒலிபெயர்ப்பும் ஒரளவு இடம் பெற்றா லும் கூட, நல்ல தமிழில் கலைச் சொற்களை உருவாக்கும் முயற்சி முதன்மையாக அமைந்திருந்தது.

தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம் பள்ளிப் பாட நூல்களை மட்டுமல்லாது, நடுவண் அரசின் நிதியுதவியைக் கொண்டு கல்லூரிப் பாடநூல்களையும் வெளியிட முனைந்ததன் விளை வாக, புதிய கலைச் சொல்லாக்கத் தொகுதியொன்றை தயா ரித்து வெளியிட்டது. 1971ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் தொகுதி அதுவரை வந்த தொகுதிகளில் அளவில் மட்டுல்லாது தரத்திலும் சிறந்ததாக அமைந்திருந்தது.

அரசு முயற்சியும் தனிப்பட்ட அமைப்புகள் முயற்சியும்

அறிவியல் தமிழுக்கான கலைச் சொல் சிந்தனை கடந்த 150 ஆண்டுகளாகவே தமிழகத்திலும் இலங்கையிலும் இருந்து வருகிறது. இப்பணியில் அரசாங்க முயற்சி ஒருபுற மும் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் போன்ற தமிழர் அமைப்புகளின் முனைப்பு மறுபக்கமும் இருந்து வந்துள்ளது. காலப் போக்கில் தெளிவும் திட்பமும் உடைய கலைச் சொற்களைத் தமிழிலேயே உருவாக்கும் முயற்சி படிப்படியாக வெற்றிபெற்று வந்துள்ளன.

1950ஆம் ஆண்டிற்குப் பின்னர் கலைச் சொல்லாக்கப் பிரச்சினைகளின் பல்வேறு கூறுகள்பற்றி தமிழ் மாநாடுகளில் விரிவாக விவாதிக்கப்படும் இனிய சூழ்நிலை எழுந்தது. 1986ஆம் ஆண்டில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க மாநாடு கலைச் சொல்லாக்கம் பற்றிய மாநாடாகவே நடந்து முடிந்தது. அதன்பின் 1956 ஆண்டில் கோவை பில் நடைபெற்ற தமிழாசிரி யர் மாநாடும் கலைச்சொல்லாக்கப் பிரச்சினைகள் பற்றி விரிவாக