பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
156

156

விவாதித்தது. அதன்பின் 1963 ஆம் ஆண்டில் தென் மொழிகள் புத்தக நிறுவனமும் தமிழக அரசின் தமிழ் நூல் வெளியீட்டுக் கழ கமும் இணைந்து நடத்திய தென்னக மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடமொழிகளுக்கான மொழி பெயர்ப்புக் கருத்தரங்கிலும் கலைச் சொல்லாக் சிக்கல்களைப் பற்றி நான்கு மொழி வல்லுநர்களும் பொதுவாக விவாதித் தனர், அடுத்து 1978, 1978 ஆம் ஆண்டுகளில் கோவை பூ.ச. கோ. கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்குகளில் சொல் லாக்கச் சிக்கல்களைப்பற்றி, அவ்வத் துறை அறிஞர்களால் விரி வாக அலசி ஆராயப்பட்டது. 1979ஆம் ஆண்டில் சென்னை மீரா அறநிறுவனம் கா. திரவியம் தலைமையில் ந - த் திய மொழிபெயர்ப்பு’க் கருத்தரங்கில் தமிழில் கலைச் சொல்லாக்கம், செய்யும்போது எதிர்ப்படும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப் பது என்பது பற்றி மிக விரிவாக விவாதிக் கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் கருத்தரங்குகளிலும் அண்ணா பல் கலைக்கழக வளர் தமிழ் மன்றம், அறிவியல் தமிழ் இலக்கியக் கழகக் கூட்டங்களிலும் கலைச் சொல்லாக்கப் பிரச்சினைகள் தொடர்ந்து அறிவியல் தமிழ் வல்லுநர்களால் விவாதிக்கப் பட்டு வருகிறது.

தனிப்படடவர்களின் சொல்லாக்க முயற்சிகள்

இதுவரை அமைப்புகள் வழியாக நடைபெற்ற கலைச் சொல் லாக்க முயற்சிகளைக் கண்டோம். இனி தனிப்பட்ட வர்கள் மேற்கொண்ட கலைச் சொல்லாக்க முயற்சிகளை ஆராய்வோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையில் மருத்துவப் டே ராசிரியராகப் பணியாற்றிய அமெரிக்கரான ஃபிஷ் கிறீன் கலைச் சொல்லாக்கத்தில் காட்டிய முனைப்பும் தொகுத்த கலைச் சொல்லகராதித் தொகுப்புகளைப் பற்றியும், "மனோன் மணியம்' ஆசிரியர் நூற்றொகை விளக்கம் மூலம் மேற் கொண்ட கலைச் சொல்லாக்க முயற்சிகளைப் பற்றியும் முன்பே ஆராய்ந்தோம்.

இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் கலைச் சொல்லாக்கச் சிந்தன னயில் முனைப்புக் காட்டியவர்களில் மூதறிஞர் ராஜாஜி தனித்துவத்தோடு விளங்குகிறார், அறிவியல் நுட்பச் செய்தி களை எளிதாகத் தமிழில் சொல்வதற்கேற்ற வகையில் தமிழில் அறிவியல் கலைச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதிலே பேரார்வம் காட்டியதோடு பல கலைச் சொற்களை உருவாக்கி வெளிப்படுத்தினார்.