பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14

14

களையோ மட்டும் அளவுகோல்களாகக் கொள்ளாது, குறைந் தது பத்தாண்டுகளுக்குக் கலைச் சொல்லாக்கப் பட்டறிவு பெற்ற வர்களே குழு உறுப்பினர்களாக அமைய வேண்டும்.

இக்குழுவினர் பரிந்துரைக்கும் கலைச் சொற்களை இயன்ற வரை கல்வி நிறுவனங்கள், பதிப்பகங்கள், இதழ்கள், எழுத் தாளர்கள் பயன்படுத்த முயலவேண்டும்.

மேலும், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு மேலும் வலுவூட்டும் வகையில் அறிவியல் களஞ்சியங்கள், கலைச்சொல் அகர முதலி கள் பெருமளவில் வெளிவருதல் வேண்டும்.

காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு மலை பாள தெலுங்கு மொழிகள் உட்பட இந்திய மொழிகள் பலவற்றிலும் அறிவியல் களஞ்சியங்கள் பல தொகுதிகள் நீண்ட நாளைக்கு முன்பே வெளிவந்துவிட்டன. அதேபோன்று அறிவியல் கலைச் சொல் அகரமுதலிகளும் பலவாக வெளிவந்துள்ளன. ஆனால், தமிழில் அத்தகைய முயற்சிகள் அண்மைக் காலத்திலே தான் தொடங்கப்பட்டுள்ளன.தமிழ்ப் பல்கலைக் கழகம் இதில்முனைப் புக் காட்டத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி தரும் செய்தியாகு .

அறிவியல் தமிழ் வளர்ச்சியைப் பொருத்தவரை தமிழகப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் இணைந்து அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான அமைப்பொன்றை உருவாக்கி, காலத்தின் தேவைக்குரிய பணிகளைக் கணக்கிட்டு, ஒவ்வொரு பல்கலைச் கழகமும் ஒரு குறிப்பிட்ட அறிவியல் தமிழ்ப் பணியை மேற் கொண்டு செயலாற்ற வேண்டும். இத்தகைய பங்கேற்புகளையே இன்றைய தமிழ் ஆவலோடு எதிர் நோக்குகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அறிவியல் தமிழ்வளர்ச்சி கல்வி நிறுவனங்களையும் தாய்மொழிவழி அறிவியல் அறிவு பெறும் இளைய தலைமுறையினரையுமே பொருத்துள்ளது எனக் கூற வேண்டியதில்லை.

அறிவியல் தமிழ் வளர்ச்சியானது முனைப்பான விவாதங் களாலோ வெறும் கலைச்சொல்லாக்கத்தாலோ மட்டும்அமைந்து விடுவதன்று. அஃது தாய்மொழி வாயிலாக அறிவியல் கல்வி பெறும் இளைய தலைமுறையின் எண்ணிக்கைப் பெருக்கத்தைப் பொருத்ததும் ஆகும். எந்தெந்த நாடுகள் தாய்மொழி வாயிலாக அறிவியல் அறிவை வளர்த்துவருகிறதோ அந்த நாடுகளிலெல்