பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

158

இந்திய அரசுக்காக யுனெஸ்கோ கூாயா என்ற திங்க ளேட்டையும் வெளியிட்டு வருகிறது. 1967 முதல் வெளிவரும் இவ்வேட்டில் அரசியல் தவிர்த்து கல்வி, பண்பாட்டுக் கட்டுரை கள் வெளிவந்தாலுய மிகுதியாக இடம்பெறுவது அறிவியல் கட்டுரைகளே ஆகும். அதிலும், அண்மைக்கால அறி வியல் கண்டுபிடிபபுகளைப் பற்றிய நுணுக்கமான கட்டுரைகளை உலக வல்லுநர்கள் எழுதுகின்றனர். தமிழ் உட்பட 4 உலக மொழிகளில் வெளிவரும் இவ்வறிவியல் கட்டுரைகளை உடனுக் குடன் மொழிபெயர்த்து வெளியிடவேண்டியுள்ளது. இக்கட்டுரை களுக்கென பலப்பல கலைச் சொற்களை உருவாக்கிப் பயன் படுத்த வேண்டியதாயுள்ளது. இவ்வகையில் கடந்த இருப தாண்டுகளில் சுமார் ஐம்பதினாயிரம் கலைச் சொற்கள் உருவாக் கப்பட்டுள்ளன . இக்கலைச் சொற்கள் ஆங்கில வேர்ச்சொற்கள் தரும் பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் தமிழ் இலக்கண விதிமுறைகளுக்கிணங்க, தக்கவாறு பகுதி, விகுதி களோடவே அமைக்கப்படுகின்றன.

இக் கலைச்சொற்கள் அனைத்தையும் தொகுத்து சொற் பொருள் விளக்கங்களுடன் அறிவியல் தமிழ்க் கலைச்செr ற் & sm (65%uth (Encyclopaedie Tamil Technical Dictionary) st if p பெயரில் இதன் ஆசிரியர் மணவை முஸ்தபாவால் தொகுக் கப் பட்டுள்ளது.

கலைச்சொற் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் கலைக் கதிர்’ திங்களிதழின் பங்கு பணி குறிப்பிடத்தக்கதாகும். காலந்தாழ்ந்த அறிவியல் செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்ற போதிலும் கூடியவரை நல்ல தமிழில் எழுதுவதை ஊக்குவித்து வருகிறது இதழில் இடம்பெறும் அறிவியல் கட்டுரை களுக்கான கலைச் சொற்கள், இதற்கு முன் வெளிவந்துள்ள கலைச்சொல் தொகுதிகளிலிருந்து பெரும்பான்மை பயன்படுத்தப் பட டாலும்கூட சிறுபான்மைக் கலைச் சொற்கள் கட்டுரையாசிரி யர்களால் அவ்வப்போது படைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாககக் கலைக் கதிர்' இதழில் பல்வேறு துறை வல்லுநர் களால் பயன்படுத்தப்பட்ட 45, ( 00 கலைச் சொற்களைத் தொகுத்து அதன் ஆசிரியராக இருந்த ஜி.ஆர். தாமோதரன் 'அடிப்படை அறிவியல் கலைச்சொல் அகராதி', 'சமூக அறிவி ய ல் கலைச்சொல் அகராதி”, “பயனுறு அறிவியல் கலைச்சொல் அகராதி' என்ற பெயர்களில் மூன்று தொகுதிகளைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.