பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
159

159

பதிப்பகங்களும் பல்கலைக் கழகங்களும்

மற்றும் அதிக அளவில் அறிவியல் நூல்களை வெளியிட்டு வரும் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், போன்ற பதிப்பகங்களும் தினமணி, களஞ்சியம், அறிக அறிவியல் போன்ற ஏடுகளும் கலைச்சொல்லாக்கப் பணியில் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றி வருகின்றன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இதுவரை தமிழில் வெளி வந்துள்ள கலைச் சொற்களைத் தொகுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள கலைச்சொற்களின் எண் ணிக்கை இரண்டு லட்சம் எனக் கருதப்படுகிறது. இவ்விரு நாடு களிலும் கையாளப்பட கலைச்சொற்களில் சில குறிப்பிட்ட

வேறுபாடுகளைக் காண முடிகிறது.

தமிழகத்தில் வெளிவந்த கலைச் சொற்களில் தமிழ்ச்சொற் கள் என்ற பெயரில்சமஸ்கிருதச் சொற்களே முன்பு பெரிதும்இடம் பெற்றன. இதற்கு 1982இல் தமிழக அரசு தயாரித்து வெளி யிட்ட கலைச் சொல் தொகுப்பே சான்றாகும். தூய தமிழ்ச்சொர் களே கலைச்சொற்களாக அமைதல் வேண்டும் என்ற வேட்கை தமிழறிஞர்களிடையே எழுந்ததோடு, முனைந்து அவ்வாறே உருவாக்க முடியும் என்ற வீராந்த போக்கின் விளைவாக உருப் பெற்றதே சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க கலைச்சொல் அகராதித் தொகுப்பு. இப்போக்கு மேலும் தொடர்ந்தாலும்கூட சமஸ்கிருதச் சொற்களும் தமிழ்க் கலைச்சொல் என்ற பெயரில் சிறுபான்மையாக வேனும் தொடரவே செய்தன. ஆனால், இலங் கையில் ஃபிஷ் கிறீன் காலத்தில் உருவாக்கப்பட்ட கலைச் சொற்களில் சமஸ்கிருத வாடை வீசிய போதிலும் 1955 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள் நல்ல தமிழிலேயே அமைக்கப்பட்டன. கலைச் சொல்லாக்கத்திற்கு வழிகாட்டும் விதிமுறைகளை ஆரம்பத்தில் கிறீன் வகுத்துத் தந் ததுபோல் தமிழ் நாட்டில் யாரும் விதிமுறை வகுத்து வழி காட்ட வில்லை என்பது நினைவு கூரத்தக்கதாகும்.

இதுவரை தமிழகத்திலும் இலங்கையிலும் உருவாக்கப் பட்ட கலைச் சொற்கள் அனைத்தும் ஒலி பெயர்ப்பு, மொழி பெயர்ப்பு, புதுச் சொற்படைப்பு என்ற முறையிலே சொல்லாக்

கம் செய்யப்பட்டு வருகின்றன.

கண்டுபிடிக்காததற்கு ஏன் புதிய கலைச் சொல்:

அறிவியல் கலைச் சொற் படைப்புப் பற்றி மாறுபாடான

கருத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தே வரு

கின்றன.