பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

160

அறிவியல் நமக்குப் பதியது தமிழகத்தில் தமிழர்கள் ஏதே னும் அறிவியல் கண்டுபிடிட் புகளைச் செய்திருந்தால் அதற்கேற்ற கலைச் சொற்களைத் தமிழில் அமைத்து வழங்குவது பொருத்த மாக இருக்கும் ஆனால், மேனாட்டார்கள் கண்டுபிடித்து அதற் குரிய பெயர்களையும் அவர்களே சூட்டியுள்ளார்கள். இந் நிலை யில் நாம் கண்டுபிடிக்காத அறிவியல் உண்மைகளுக்கான கலைச்சொற்களை நாம் தமிழில் அமைத்து வழங்குவது எப்படி? கண்டுபிடித்தவர்கள் வைத்த பெயரையே நாமும அப்படியே வழங்குவது தானே முறை” என வாதிடுபவர்கள் இல்லாமல் இல்லை.

எதற்கு முதனமை: அறிவு வளர்ச்சிக்கா? மொழி கலத்திற்கா?

மற்றும் சிலர் அறிவியலைப் பொருத்தவரை அறிவு வளர்ச்சி தான் முக்கியமே தவிர மொழிநலன் பெரிதல்ல. எனவே, எளி தாகப் பு: யும் வகையில் எந்தக் கலைச்சொற்களால் அறிவியல் சுட்டப்படுகிறதோ அதே மொழிக் கலைச் சொல்லை கூடிய வரை அதே போக்கில் ஒலிபெயர்ப்பாக அமைத்துக் கொள்வதே பொருத்தமாகவும் சிறந்ததாகவும் அமையமுடியும் எனச் கூறு கின்றனர்.

மேலும் சிலர், உலகெங்கும் மின்னல் வேகத்தில் வளர்ச்சி பெற்றும் அறிவியலைச் சொல்வதற்குத் தமிழில் கலைச்சொற் களைக் கண்டறிவதில் காலத்தைச் செலவு செய்தால், அறிவியல் முன்னேற்றத்தோடு நம்மால் இணைந்து சொல்ல இயலாமல், பின் தங்க நேரிட்டு விடாதா? இந்நிலை ஏற்படாது தவிர்க்கும் பொருட்டு அறிவியல் துறைக்கான மூலச்சொற்களை பாற்ற

திருத்தமன்றி ஏற்றுக்கொள்வதே சாலச் சிறந்ததாக இருக்க வியலும் எனக் கூறுகின்றனர் .

இவர்கள் வாதங்களில் உண்மை இல்லாமல் இல்லை. இவற்றை முற்றாகப் புறக்கணித்து விடவும் முடியாது முழுக்க ஏற்கவும் இயலாது.

இங்கு ஒரு முக்கியக் கருத்தைக் கவனத்திற்கொள்ளவது நல்லது. தமிழைப் பொருத்தவரை சொல்லாக்கம் இருவகைகளில் அமைவது நலம். முதலாவது, அறிவியல் நுட்பம் அறியாதவர் கட்கு, அவற்றைத் தெளிவாக விளங்கும் வகையில் சற்று விரி வான வடிவில் சொல்லாக்கம் செய்யலாம். இதன் முதல் நோக் கம் அறிவியல் செய்தியை நுட்பத்தைத் தமிழில் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதேயாகும். இக் கலைச் சொற்களில் மொழித்துய்மையைக் காட்டிலும் கருத்துத் தெளிவுக்கே முதல் முக்கியத்துவம், இக்கலைச்சொல் மாற்ற, திருத்தங்களுக்கு உட்