பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
161

181

படுவதாக இருக்கும். இரண்டாவது சுருங்கிய வடிவில், சொற் செட்டுடன் அறிவியலின் நுட்பக் கருத்தைத் தெளிவாக உணர்த் தும் வகையில் அமைவதாகும். இச் சொற்களே நிலைபேற்றுத் தன்மையையுடைய சொற்களாகும்.

எந்நாடும ஏற்கும் பன்னாடடுக் கலைச்சொற்கள்

கலைச்சொற்கள் அனைத்தையுமே அப்படியே ஒலிபெயர்ப் பாகப் பயன்படுதிக் கொள்ளலாம் என்ற கருத்து ஏற்புடைய தன்று சர்வதேச அளவில் அனைவராலும் பயன்படுத்தத்தக்க ஒருசில கலைச்சொற்களை நாமும் அப்படியே,ஒலிபெயர்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சான்றாக என்ஸைம் (Enzyme) ஐசோடோப் (isotope), ஓஸோன் (Ozone) போன்ற சொற்கள் சர்வதேச அளவில் எல்லோராலும் மூலச் சொற்களாகவே கையாளப்படுவதால் நாமும் அவ்வாறே பயன்படுத்திக் கொள்ள லாம். ஆனால், அதே சமயத்தில் இயன்றவரை விளக்கத்திற்கா கச் சொல்லாக்கம் செய்து பயன்படுத்திக் கொள்வதிலும் தவறில்லை.

கூட்டுப் பெயர்களும் குறியீடுகளும்

மேலும், ச ல அறிவியல் கலைச்சொற்கள் அறிவியல் கண்டு பிடிப்பாளர்களின் பெயரால் அமைக்கப்பட்டுள்ளன. சான்றாக ஆம்பியர் (Ampere), ஓம் (Ohm) போன்றவைகள் . மற்றும் சில எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதோ அந்த நாட்டின் அல்லது இடத்தின் பெயரால் குறிக்கப்பட்டுள்ளன. இப்பெயர் கள் அவரவர் தாய்மொழியிலேயே அமைக்கப்பட்டு வழங்கி வருகின்றன. இவ்வாறு நினைவுப் பெயர்களாக (eponym) அமைந்துள்ள அறிவியல் கலைச்சொற்களை எவ்வித மாற்றமும் திருத்தமுமின்றி உள்ளது உள்ளவாறே ஒலி பெயர்ப்புச் செய்து வழங்குவதே முறைமையாகும்.

மற்றும் சில அறிவியல் கலைச்சொற்கள் பொருட் பெயர் களின் மூலமொழியின் முதலெழுத்துக்களின் கூட்டிணைவாக அமைக்கப்பட்டுள்ளன. காரணம், சில கலைச்சொற்கள் தெளிவு தரும் பொருட்டு விளக்கமாக அமைந்துள்ளன. சான்றாக GJLT # (RADAR) srs; L & ‘Radio Detection and Ranging” என்ற நீண்ட சொற்றொடரின் முதலெழுத்துகளெல்லாம் சேர்ந்த சுருக்கப் பெயறாக RADAR என அமைந்துள்ளது. இவ்வாறே LA ER” srsă Lig, Liglt Amplification by Stimulated Emis onof Radiation என்பதிலுள்ள முதலெழுத்துகளின் கோவையே

11