பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
162

162

1ASER என்பதாகும். இவற்றைக் குறிக்க குறுகிய வடிவில் "Radar' Laser' என வழங்குவதை அப்படியே ரேடார், லேசர்" என ஒலிபெயர்ப்பாக வழங்குவதே பொருத்தமாகும்.

அறிவியலில் பயன்படுத்தப்படும் குறியீடுகளை மொழி பெயர்த்துப் பயன்படுத்த முனைந்தால் குழப்பமே மிஞ்சும். 0ழ்ா2 போன்ற குறியீடுகளை ஒலிபெயர்ப்போ மொழிபெயர்ப்போ செய்ய முனையாமல் அப்படியே மூல வடிவத்தோடவே பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.

வாய்ப்பாடுகளும் சூத்திரங்களும்

So, H, O, போன்ற கூட்டுப் பெயர்களின் குறியீடுகளான சூத்திரங்களையும் மூலக்குறியீட்டுச் சூத்திரங்களாகவே பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறே Ca, Cu, Ci போன்ற தனிமக் குறியீடுகளையும் வாய்ப்பாடுகளையும் கூட எவ்வித மாற்றத்திற்கும் உட்படுத்தாமல் மூல வடிவோடு பயன் படுத்திக் கொள்ளுதலே சரியாக இருக்கும்.

அதே போன்று எலெக்ட்ரான், புரோட்டான் போன்றவை களை சர்வதேச லைச்சொற்களாகக் கருதி ஒலிபெயர்ப்பாகவே பயன்படுத்திக் கொள்ளலாமாயினும், இச் சொற்கள் உணர்த் தும் பொருள் நுட்பத்தை அறியும் வகையில் மின்னணு, நேர் மின்னணு எதிர் மின்னணு, என்றெல்லாம் விளக்கம் பெறும் வகையில் பெயர்த்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. மேலும், ரப்பர், ய்ல்பு போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப்போன்றே வழங்கி நிலைபெற்றுவிட்ட காரணத்தால் அவற்றையும் அப் படியே ஏற்பதுதான் பொருத்தம். மற்றும் சிமெண்ட் போன்ற சொற்களின் ஒலிபெயர்ப்பில் சிறுசிறு மாறுதல்களோடு வழங்கி வருகின்றன. சான்றாக, சிமென்ட்டை , சாதாரண வழக்கில் படித்தறியா மக்களும் மற்றவர்களும் சிமிட்டி' எனச்சிதைவோடு அழைக்கிறார்கள் அதே போன் று டிஸ்யூ, என்பதை "திசு’ என்று அழைக்கிறோம். இச் சிதைவு தமிழ்ச் சொற்களைப் போன்ற தோற்றத்தையே கொடுத்துவிடுவதால் இத்தகைய சொற்களை அப்படியே பயன்படுத்திக் கொளவதுதான் சிறப் பாகும்

மொழிபெயர்ப்புக் கலைச்சொற்கள்

அறிவியல் மொழிபெயர்ப்புப் பற்றி மொழிபெயர்ப்பு' என்ற பகுதியில் விரிவாகக் கண்டோம். இங்கே அறிவியல் கலைச்

சொற்களை மொழிபெயர்த்து சொல்லாக்கம் காண்பதைப்பற்றி ஆராய்வோம்.