பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
164

164

விளக்கம் கருதி பெயர்க்கும் சொல்லாக்கம், மூலச் சொல் செயற்பாட்டின் அடிப்படையிலேயே அமைதல் வேண்டும். அதாவது கூடியவரை இடுகுறியாகவன்றி,காரண அடிப்படையில் அமைய வேண்டும் சான்றாக, சைமாட்டிக்ஸ் (Cymatics) என்பது அண்மையில் அறிவியலார் அறிவித்த அறிவியலின் புதிய கண்டுபிடிப்புத் துறையாகும். அலை முடியும்போதும் அதிர்வு முடிவுறும்போதும் ஒரு குறிப்பிட்ட டிவெடுத்தே முடி கின்றது என்பதே அப்புதிய கண்டுபிடிப்பு. இதை ஒரு புதிய அறிவியல் துறையாக ஆக்கி, அதனை சைமாட்டிக்ஸ்' எனப் பெயரிட்டுள்ளனர். அதிர்ந்து முடியும் அலையைக் குறிக்கும் லத்தீன் மொழிச் சொல்லான சைமாட்டிகா விலிருந்து உ ஆவாக் கப்பட்டது சைமாட்டிக்ஸ்’ எனும் புதிய அறிவியல் சொல். இதை ஒலி பெயர்ப்பாகக் கூறும் அதே சமயத்தில், இச் சொல் வழி அறிவியல் செயற்பாட்டினை உணர்த்தும் வகையில் 'அலை அதிர்வியல் என்றோ அல்லது அலை அதிர்வு இறுதி நிகழ் வியல்' என்றோ விளக்கம் தரும் சொல்லால் பெயர்த்துக் கூறி னால், படிப்பவர்க்கு புத்தம்புதிய அறிவியல் கலைச் சொல்லின் பொருளைப் புரிந்துகொள்ளப் பெருந்துணையாக இருக்கும்.

வேர்ச்சொற்கள் மிகுந்த மொழி தமிழ்

புதிய சொல்லாக்கத்திற்கு மிக அழுத்தமான அடிப்படை மூலச் சொல்லின் மற்றும் பெயர்ப்புச் சொல்லின் வேர்சசொற் களாகும். இதுவரை ஆங்கில அறிவியல் கலைச் சொற்களின் வேர்ச்சொற்கள் பெரும்பான்மை லத்தீன், கிரிக் சொற்களின் வேரினின்றே உருவாக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று. இக்கலைச் சொற்களைத் தமிழில் பெயர்த்தமைக்கும்போது, தமிழில் முழுப் பொருளை விளக்கவல்ல வேர்ச் சொல்லைக் கண்டு சொல்லாக்கம் செய்தலே பொருத்தமுடையதாகும். உல கத்து மொழிகளிலேயே மிக "அதிகமான வேர்ச் டிசொற்களை யுடைய மொழியாகத் தமிழ் அமைந்திருப்பது நமது நற்பேறாகும் இதனால் எத்தகைய கலைச்சொல் ஆக்கமானாலும் எளிதாக உருவாக்கிட இயலும். வேண்டியதெல்லாம் போதிய தமிழறிவு, ஆர்வம், முயற்சி, உழைப்பு, பொறுமை ஆகியவைகளே யாகும்.

கல்வியறிவும் இயல்பறிவும் - ஓர் நுண்ணிய வேறுபாடு

ஆங்கிலத்தில் Knowledge, Wisdom என்ற இரு சொற்கள் உண்டு. இரண்டு சொற்களும்,பொருள் உணர்த்துகின்ற தன்மை யில் வேறுபாடு உண்டு. அவ்வேறுபாட்டை உய்த்துணரா நிலையில் இரண்டு தன்மைகளையும் ஒன்றாகக் கருதி தமிழில்