பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

185

அறிவு என்று கூறி விடுகிறோம். Know என்ற சொல்லினடி யாக உருவான சொல் Knowledge" மேலும் கல்வயறிவாலும் பட்ட றிவாலும் மேலும் மேலும் விஷயங்களை அறிந்துகொள்வ தால் நாம் பெறுகின்ற அறிவு Knowledge'. இதனைத் தமிழில் கல்வியறிவு' எனலாம் :Wise என்பதிலிருந்து உருவான சொல் Wisdom என்பது இஃது ஒருவரிடம் இயல்பாகக் கருக்கொண்டு உருவெடுப்பது. இதனை இயல்பறிவு எனக்கூறுவதே பொருத்த முடையதாக இருக்கும். இவ்வாறு எந்தச் சொல்லை பெயர்க்க முனைகிறோமோ அந்தச் சொல்லின் அடித்தளத்தை அறிந்து பெயர்ப்புச் சொல்லை உருவாக்குவதே சாலச் சிறந்ததாக

இருக்கும்.

கலைச்சொல்லும் தொடர்ச் சொற்களும்

சொல்லாக்கத்தில் மற்றொரு விஷயத்தை மனதிற் கொள்ள வேண்டுவது அவசியமாகும். ஒரு கலைச் சொல்லை உருவாக்கும் போது, அச்சொல் தொடர்பாகத் தொடரும் வேறுபல சொற் களுக்கும் அக்கலைச் சொல்லின் சாய லேயே சொற்கள் உரு sua á sí... LG)á sö Gsusön Gtb. F r sðr p r S, Microbs, Microbiology, Micro biologist என்ற சொற்கள் உயிரியலில் பயன்படுத்தப்படு கின்றன. Microbs என்ற சொல்லுக்கான தமிழ்க் கலைச் சொல்லை 'நுண்ணுயிர்' என ஆக்கலாம். அதனைத்தொடர்ந்து வரும் மற்ற கலைச்சொற்களை நுண்ணுயிரியல் நுண்ணுயிரிய லார்’ என அமைப்பதே எளிதானதும் தெளிவானதுமாக இருக்கும்.

நம் முன்னோர்கள் இந்த அடிப்படையிலேயே தொடர் சொல்லாக்கங்களை உருவாக்கிச் சென்றுள்ளனர் என்பது

நினைந்தின்புறத்தக்கதாசம்.

சொல்லுக்குச் சொல்-பெயர்ப்புச் சிக்கல்

அறிவியல் கலைச் சொற்களைப் பொருத்தவரை நேருக்கு நேராகக் கலைச் சொற்களை மொழிபெயர்ப்பதை ஓர் எளிய முறையாகக் கையாளப்பட்டு வருகிறது. சான்றாக *Sound wave” என்ற இரு சொற்கள் ஒரு சொல் போன்று அமைந்துள்ளது. இவ் விரு சொறகளைச் சொல்லுக்குச் சொல்லாக ஒலி அலை என பெயர்த்தால் சிறப்பாக அமைகிறது. ஆனால், இம்முறையைக் கைக் கொள்ளும்போது மிகுந்த கவனம் வேண்டும். இல்லையென் றால் தவறான பெயர்ப்பையும், பொருள் விளக்கத்தையும் பெறும் படியாகிவிடும். சான்றாக, "Glosed circuit என்பதை இலங்கை யில் மூடிய சுற்று' என்று மொழி பெயர்த்துள்ளனர். மின்னோட் டம்வெளிச் செல்லாதவாறு மூடியசுற்றுக்குள் அமைவது எனத்