பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

188

தவறாகப் பொருள் கொள்ள வழிகோலுகிறது. ஆனால், உண் மையில் முழுமையான மின்னோட்டச் சுற்றுப் பாதையைக் குறிப் பதாகவே இச்சொல் அமைந்துள்ளது. இம்மாதிரி சத்தர்ப்பங் களில் இருசொற்களும் இணைந்து என்ன பொருளைத் தரு கிறதோ அதனை நுணுக்கமாக அறிந்து பெயர்த்தலே பொருத்த மாக அமையும்.

ஆங்கிலச் சொற் கருத்தின் வழியே கண்ணை மூடிக் கொண்டு சொல்லுக்குச் சொல் பெயர்த்துச் சொல்லாக்கம் செய்யும்போது சில சமயங்களில் தவறாக பொருள் அமைய நேரும். சான்றாக, சூரியனில் காணும் கரும்புள்ளியை "பிளாக் ஹோல்' (Block hole) என ஆங்கிலத்தில் குறிக்கின்றனர். அதைத் தமிழில் கூறுகின்றபோது hole என்ற ஆங்கிலச்சொல் லுக்கு துளை' எனப் பொருள் கொண்டு கருந் துளை" எனக் குறிக்கின்றனர். உண்மையில் சூரியனில் காணும் கரும்புள்ளி "கருந் துளை’ அல்ல. துளை’ என்றால் ஒரு பக்கம் ஏற்பட்ட ஒட்டை மற்றொரு பக்கத்தில் முடிய வேண்டும். ஆனால் சூரிய னில் அத்தகைய ஒட்டை ஏதுமில்லை. அங்கே மிகவும் ஆழமான குழி உள்ளது. மிகுந்த ஆழத்தின் காரணமாக இருளடர்ந்து கரு மையாகக் காட்சியளிக்கிறது. எனவே, அதை "கருங் குழி' என்று சொல்லாக்கம் செய்வதே பொருத்தமாக இருக்கும். சொல் உணர்த்தும் தன்மையை உளத்திற்கொண்டே சொல் லாக்கம் செய்தல் வேண்டும். அப்போதுதான் பொருத்தமான கலைச் சொல் அமைய இயலும். ஒலிபெயர்ப்போடு மொழிபெயர்ப்பு

சில சமயம் கலைச்சொற் பெயர்ப்பின்போது ஒரு பகுதி ஒலி பெயர்ப்பாகவும் மற்றொரு பகுதி மொழிபெயர்ப்பாகவும் அமைய நேர்கிறது. சான்றாக x - Ray என்பதை எக்ஸ் கதிர்' எனக் குறிக்கிறோம்.

இதனையே பொருள் விளக்கம் பெறும் வகையில், எக்ஸ்-கதி ரின் செயலை அடிப்படையாக வைத்து ஊடுருவிச் சென்று உள்ளே இருப்பவற்றைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்ட உதவும் கதிர்’ எனப் பொருள் கொண்டு ஊடுகதிர்' என்ற சொல்லாலும் குறிக்கலாம். இதனால் பொருள் தெளிவு பெற வாய்ப்பேற்படுகிறது. புதுச் சொல்லாக்கம்

பொதுவாக கலைச் சொல்லாக்கம் செய்வதில் அதிலும் சிறப் டாக அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்கான கலைச் சொல் லாக்கங்களை உருவாக்குவதில் ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு