பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
167

167

பெயர்ப்புகளைக் காட்டிலும் தமிழிலே மூலமாக உருவாக்கப்ப டும் கலைச் சொற்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழில் கலைச் சொற்களை உருவாக்குபோது பழந் தமிழ் இலக்கியங்களில் அதற்கான சொல்வடிவோ அன்றி வேர்ச் சொற்களே கிடைக்க இயலுமா எனப் பார்க்க வேண்டும். ஏனெனில், உலகத்து .ெ ழிகளிலேயே மிக அதிகமான வேர்ச் சொற்களை யுடைய மொழியாகத் தமிழ் மொழி கருதப்படுகிறது. மொழியியலறிஞர் டாக்டர் கால்டுவெல், டாக்டர் எமினோ போன்றோரெல்லாம் இதை ஆதாரபூர்வமாக நிலைநாட்டிப் போற்றியுள்ளனர்.

பண்டைய இலக்கியங்களில் மட்டுமல்ல, அண்மைக்கால, இக்கால இலக்கியங்களிலிருந்தெல்லாம் வேர்ச் சொற்களைப் பெறமுடியும். நமது அன்றாடப் பேச்சுவழக்கில் ஆயிரக்கணக் கான சொற்களிலிருந்து பொருத்தமான வேர்ச் சொற்களைப் பெற முடியும்.

இவ்வகையில் எவ்வாறு சொல் லாக்கம் செய்வது என்பதை ஒரு சான்றுமூலம் விரிவாக ஆராய்வோம்

அண்மைக் காலத்தில் அறிவியல் உலகம் ஒரு புதிய துறை யைத் தோற்றுவித்துள்ளது அது 'ஃபியுச்சராலஜி'(Futurology) பெயரால் அழைக்கப்படுகிறது

இன்றைய அறிவியல் வளர்ச்சியின் அளவுக்கேற்ப எதிர்கால வளர்ச்சியும் மாற்றமும் எந்நிலையில் இருக்கும் என்பதை விளக்கு வதே இவ்வயலின் நோக்கம் ஃபியூச்சர் (Future) என்பதைக் குறிக்க நாம் பயன்படுத்திவரும் வருங்காலம், எதிர்காலம் எனும் சொற்களைப் பயன்படுத்தலாமாயினும் அறிவியலின் தனித் துறையைக் குறிக்கும் சொல்லாக இருப்பதனால், இதற்கான தனிச் சொல்லை இலக்கியங்களில் தேடுகிறோம். அகநானூறில் எதிர்மை" என்றசொல் கிடைக்கிறது. ஆனால், 'மை' விகுதியில் ஏதோ ஒருவகை எதிரிடையான பொருள் தொனிப்பு இருப்பது போல் தோன்றுவதால், அதனை 'வை விகுதிகொண்டு "எதிர்வை’ என உருமாற்றுகிறோம். இது எல்லோர்க்கும் கருதிய பொருட் தெளிவைத் தராது என்ற என்ணத்தில் அன்றாட வழக் குச் சொற்களில் இதற்கேற்ற சொல் கிடைக்குமா எனத் தேடும் போது வாழ்நாள்" என்ற பேச்சு வழக்குச் சொல் மனதிற்படு கிறது, தொடக்கம் உண்டு. முடிவு தெரியாது’ என்பதைக் குறிப்பதே ஃப்யூச்சர்' என்ற சொல். அதே போன்று பிறந்தாகி