பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15

லாம் அறிவியல் அவரவர் தாய்மொழிக் கல்விமூலமே கற்பிக்கடி பட்டு வருகிறது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

தாய்மொழிக் கல்விக்கு முதன்மைநிலை இல்லாது வேற்று மொழியில் கல்விபெரும் நிலை இருக்கும்வரை தாய்மொழியில் அறிவியல் வளர்ச்சி' என்பது கவர்ச்சியான வெறும் முழக்கமாகத் தான் இருக்க முடியுமே தவிர கருதிய பயனைத் தராது.

தமிழ்மொழி வாயிலாக அறிவியல் கல்வி பெற இளைய தலைமுறை விழையாததற்குக் காரணம் எதிர்கால வாழ்வுக்கு உதவுமோ உதவாதோ என்ற ஐயப்பாடுதான். படிக்கவைக்கும் பெற்றோரும் சரி, படிக்கும் மாணவரும் சரி அரசுப்பணி போன்ற வற்றைக் கருதியே கல்வியைத் தொடர்கின்றனர். இந்நிலையில் "தாய்மொழி வாயிலாகக் கல்வி பெற்றவர்க்கே அரசுப் பணியில் முந்துரிமை' என அரசு உறுதியளிக்கும்வரை 'தமிழ் மூலம் அறி வியல் கல்வி என்பது கானல் நீராகத்தான் இருக்கும்.

அதுவரை அறிவியல் தமிழ் ஆர்வலர்கள் நூல்கள், இதழ் கள் வாயிலாக தமிழில் அறிவியல் செய்திகளைப் பொது மக்களுக்கு வழங்கும் பணியைத்தான் செய்ய முடியும்,

இந்நூலை எழுதுவதற்குத் தூண்டுகோலாயமைந்தது பெரியார் வாசகர் வட்டமாகும். 1987 ஆம் ஆண்டின் .ெ .ாடக் கத்தில் சென்னை பெரியார் வாசகர் வட்டத்தினர் விடுத்த அழைப்புக்கிணங்க 'காலம் தேடும் தமிழ்' என்ற தலைப்பில் உரையாற்றினேன். அவ்வுரை விடுதலை’ நாளிதழில் இரண்டு நாட்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. அதைப் படித்த முன்னாள் தொழில் அமைச்சர் க. ராஜாராம் அவர்கள் அச் சொற்பொழிவை விரிவுபடுத்தி நூலாக வெளியிட்டால் சிறப்பாக இருக்குமே என ஆலோசனைகூறிஊக்குவித்தார். நூலாக வடிக்க எண்ணமிருந்தும் எழுத நேரமில்லாததால் நாட்கள் ஓடின.

கடந்த ஏப்ரல் 6இல் (1987) மலேசியா சென்றிருந்தபோது தலைநகர் கோலாலம்பூரில் மலேசியக் கூட்டரசின் பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ ச. சாமிவேலு அவர்களின் தலைமையில் அறிவியல் தமிழ் வளர்ச்சி பற்றி சில உரத்த சிந்தனைகளை வெளியிட்டேன். துணை அமைச்சர் டத்தோ கு. பத்மநாபனும் மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் திருச்

சுடர் இராமசாமி மற்றும் தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் மிகுந்த எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் பெருமளவில் கலந்து