பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

189

முனனொட்டும் பின்னொட்டும்

மேனாட்டுக் கலைச்சொல்லாக்க விதி முறைகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாக அமைந்திருப்பது முெைனாட்டு (Prefix , பின் னொட்டு (Suffi ) என்பனவாகும். இத்தகைய விதிமுறைகள் எதனையும் பின்பற்றாமல் சொல்லாக்கம் செய்ய முனைவதால், சொல்லாக்கப்பணி கடினமடைவதுடன் முன்னுக்குப் பின் முர ணான முறையில் சொல்லாக்கம் அமைய நேர்கின்றது. Photography” srsởr LIsogõ *f)ựpuu-ử" srsởrá9(3pTử, “PhotosyLthesis" என்பதை ஒளிச்சேர்க்கை எனக் கூறுகிறோம் "Photostat' என்பதை நகல்’ என அழைக்கிறோம் Photo எனும் முன் னொட்டு வருமிடமெல்லாம் ஒரே மாதிரி தமிழ் முன்னொட்டும் வந்தால்தானே ஆங்கிலம்போல் பொருள் பொதிந்த சொற்கள் உருவாக முடியும். Photo' எனும் ஆங்கில முன்னொட்டுக்கு 'ஒளி' எனக் கொண்டால் அடுத்து வரும் கலைச்சொற்களை "ஒளிப்படம்’, ஒளிச்சேர்க்கை’, ஒளி நகல்’ என எளிதாகச் சொல்லாக்கம் காண இயலும். 1ogy' எனும் பின்னொட்டுக்கு "இயல்’ என்ற தமிழ்ப் பின்னொட்டை நாம் பயன்படுத்தி வருகி Gprih. Qsilsur Gp Sphere, Macro, Micro. Hydro, Tele, Mono, Phobia, ics போன்ற ஆங்கில முன்னொட்டு, பின்னொட்டு களுக்கு நிகரான தமிழ்ப் பின்னொட்டு, முன்னொட்டுகளைக் கண்டறிந்து பயன்படுத்த முனைந்தால் தமிழில் கலைச் சொற் களை உருவாக்குவது மிக எளிதான காரியமாக அமைந்துவிடும் என்பது திண்ணம் இரு வேறுபட்ட .ெ எருள்களைத் தரும் ஒருசொல்

கலைச் சொல்லாக்கத்தில் மற்றொரு முக்கிய விஷயத்தை மனதிற் கொள்ள வேண்டும் அதாவது, ஒரே அறிவியல் கலைச் சொல் வெவ்வேறு இயல்களில் வெவ்வேறான பொருளில் வழங்கு கின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் மிகக் கவனமாகக் கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். சான்றாக, "Cell' என்ற கலைச்சொல் உயிரியலிலும் இயற்பியலிலும் வெவ் வேறான பொருளில் பயன்பட்டு வருகின்றது உயிரியலில் இச் சொல்லுக்கு உயிரணு" என்பது பொருளாகும். அதே சமயத்தில் மின் இயலில் இதற்கு மின்கலம்' என்பது பொருளாக அமை கிறது. எனவே, இடத்திற்குத் தக்கபடி இச்சொல்லைக் கையாள வேண்டியுள்ளது.

சொல்லாக்கத் தன்மைகள்

புதிதாகத் தமிழில் கலைச் சொற்களை உருவாக்கும் போது, அக்கலைச் சொல் கூடுமானவரை கலப்படமற்ற நல்ல தமிழாக