பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

170

இருக்குமாறு அமைத்தல் வேண்டும். சொல்லாக்கத்திற்குச் சொற்செட்டு மிக இன்றியமையாததாகும் இதற்காக கூடிய வரை குறுகிய வடிவில் சொல்லாக்கம் அமையுமாறு பார்ததுக் கொள்ளவேண்டும். சொற்கள் கரடு முரடாக இல்லாது ஒசை நயமுடையதா யிருந்தால் சொற்களை உச்சரிக்கவும் கையாள வும் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லாவற்றிலும் மேலாக கலைச் சொல் பொருள் பொருத்தமுடையதாக அமைதல் அவசியம்.

கலைச் சொல்லாக்கக் கூட்டுப் பணி

இதுவரை கலைச் சொல்லாக்கம் தொடர்பாக நாம் மேற் கொண்டு வந்த முயற்சிகளையும் அதன் விளைவாக உருவான கலைச் சொல்லாக்கத் தன்மைகளையும் பொதுவாக கலைச் சொல்லாக்க முறைகளையும் வரலாற்றுப் போக்கிலும் பட்டறி வின் அடிப்படையிலும் மேலோட்டமாகப் பார்த்தோம். இனி, தரமான ஒரே மாதிரியான கலைச் சொற்களைத் தேர்வு செய்ய வும், எல்லா மட்டத்திலும் ஒரே மாதிரியான கலைச் சொற் களைப் பயன்படுத்தவும் சீரான போக்குகளை உருவாக்கவும் மேற் கொள்ள வேண்டிய செயற்பாடுகளைப்பற்றி ஆராய் வோம்.

கடந்த 150 ஆண்டுகளில் சுமார் இரண்டு இலட்சம் கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகப் பட்டியல் போட்டுக் காட்டினாலும், இச்சொற்கள் பலவேறு தன்மைகளைக்கொண்ட தாகவே உருவாக்கப்பட்டுள்ளன. காரணம், அவரவர் தம்தம் போக்கில் தாங்கள் சரியென்று கருதிய வழியில் சொல்லாக்கங் களைச் செய்துள்ளனர். இவற்றையெல்லாம் தொகுத்து, பொது வான விதிமுறைகள் வகுத்து, தரப்படுத்தும் முயற்சி எதுவும் முமுமையாக உருவாகவில்லை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இத்தகைய தொகுப்புப் பணியை நீண்டகாலமாக மேற் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அத்தொகுப்புப் பணி முழுமைபெற்றால் மிகு நலம் விளையும்.

கலைச் சொல்லாக்க முயற்சியில் ஒரு முடுக்கமான போக்கு இன்று வீரார்ந்த நடைபோடத் தொடங்கியுள்ளது என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை, "கலைக் கதிர்’, ’யுனெஸ்கோ கூரியர் போன்ற திங்களிதழ்களும் தினமணி போன்ற நாளிதழ்களும், அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற 'களஞ்சியம்’ காலாண்டிதழும் மற்றும் அறிவியல் தமிழை முனைப்போ டு வளர்க்க முயலும் நூலாசிரியர்களும் எழுத்தாளர் களும், பேராசிரியர்களும் ஆர்வப்பெருக்கோடு உழைக்கமுனைந்