பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
177

177

பெயர்ச் சொல் தமிழில் கிறித்து’ என வழங்கப்படுதல் போன்றே ஜப்பான் மொழியில் கிளிசெது" என்று அழைக்கப்படுகிறது. ஒரே சொல் அவ்வம் மொழிகளின் ஒலிப்பிலக்கணத்திற்கேற்ற மாறுதல்களைப் பெற்று வழக்கில் ஒலிக்கப்பட்டும், வரிவடிவில் எழுதப்பட்டும் வருகின்றன. அழகான தமிழில் 'தரங்கம்பாடி’ என அழைக்கப்பட்ட ஊர்ப்பெயர் ஆங்கில ஒலிப்பு முறைக் கேற்ப டிரங்குமார் என்றே ஆங்கிலேயர்களால் அழைக்கப் பட்டும் எழுதப்பட்டும் வந்தது. அதே போன்று தஞ்சாவூர் "டேஞ்சூர்' என்றும் திருநெல்வேலி டின்னவேலி' என்றும் ஆங்கி லேயர்களால் ஒலிக்கப்பட்டும், அவ்வாறே ஆங்கில வரிவடிவில் எழுதப்பட்டும் வந்தன. ஃபிரெஞ்சுக்காரர்களும் தமிழை தம் மொழிச் சொல் எழுத்தொலிக்கேற்ப ஒலிபெயர்ப்புச் செய்தே பயன்படுத்திக் கொண்டனர்.

அறிவியலுக்குத் தனி ஒலிப்பிணக்கணம் தேவை

தொல்காப்பியர் மரபியலில் வகுத்துக்கூறிய ஒலி பெயர்ப்பு இலக்கணம் தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சரியாக இருக்கலாம். இலக்கியத்தில் இடம்பெறும் இவ்வகை ஒலிப்பு முறையில் பொருட் சிதைவோ , வேறு பாதிப்புகளோ பெருமள வில் ஏற்பட்டுவிடப் ோவதில்லை.

ஆனால், அறிவியலைப் பொருத்தவரை தொல்காப்பியர் வகுத்துக்கூறிய ஒலிப்பிலக்கணத்தை முற்றாகப் பின்பற்றுவது ஒக்கமா என்பது இன்று பலரிடையே பெரும் கேள்விக் குறியாக எழுந்துள்ளது

அறிவியலானது உணர்வு சார்ந்தது அன்று. அறிவு சார்ந் தது. அங்கே பிற உணர்ச்சிப் போக்குகளைவிட அறிவுத் தெளி வுக்கே முதலிடம். எனவே, இலக்கியப் புலவர்களைப் போன்று எழுத்திலக்கண முறைகளை அறிவியல் எழுத்தாளர்கள் முற்றா கப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது பெரும்பாலோர் கருத்து. ஒலிப்பிலக்கணம் மட்டுமல்ல, தமிழில் முன்னால் வராத எழுத்துகள், பின்னால் வரக்கூடாத எழுத்து கள் என்றெல்லாம் வரையறை செய்யப்பட்டுள்ளன. இந்த விதி முறைகளும் கூட அறிவியல் தமிழில் முற்றாகப் பின்பற்ற இயலா தன என்பது பலரது கருத்து.

எனவே, இலக்கியப் படைப்பைக் கருத்திற்கொண்டு உரு வாககப்பட்டுள்ள எழுத்திலக்கண, ஒலிப்பிலக்கண விதிமுறை களை மாற்றித் திருத்தி அறிவியல் கருத்துக்களை சிதைவின்றித்

| 2