பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
178

178

தரும் வகையில் புத்திலக்கணம் வகுக்க வேண்டுமென பலரும் அவாவுகின்றனர். இஃது காலத்தின் தேவையாகவும் அமைந் துள்ளது.

மொழிக்கு மொழி ஒலிப்பு வேறுபாடுகளும் ஒற்றுமையும்

ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியே ஒலிப்பு முறை உண்டு. ஒவ்வொரு மொழியிலும் சில சிறப்பு எழுத்துகளும் அவற்றிற் கான சிறப்பு ஒலிப்பு முறைகளும் அமைவது இயல்பே. தமிழில் மு. ற, ன போன்ற சிறப்பு எழுத்துகளும் சிறப்பு ஒலிகளும் இருப்பது போன்றே மற்ற மொழிகளிலும் உண்டு. வெவ்வேறு மொழிகளுக்கிடையேயான இத்தகைய ஒலிப்புகள் சில மொழி களுக்கிடையே ஒத்திருப்பதும் உண்டு.

சில சமயங்களில் ஒரு மொழிச்சொல் வெவ்வேறு மொழி களில் சிறுசிறு வேறுபாடுகளுடன் ஒலிப்பதும் உண்டு. சான்றாக, 'Galileo என்ற பெயரை ஆங்கில ஒலிக்கேற்ற காலிலியோ" என்றும் இத்தாலிய மொழி ஒலிப்புத் தன்மைக்கேற்ப காலிலே யோ' என்றும் ஒலிபெயர்க்கப்படுகிறது. இவ்விரண்டுவித உச்சரிப்புகளுக்கும் மாறுபட்ட முறையில் கலீலியோ’, ‘கலி லியோ’ என்றெல்லாம் தமிழில் எழுதி வருகிறோம். இதில் எது சரியான ஒலிப்பு முறை? so

@Gah Gur sörgy, fir tų# @sr sirsos (Theory of Relativ tv) யைக் கண்டறிந்த விஞ்ஞானி INSTAIN பெயரை 'ஐன்ஸ் டைன்' என்று சிலர் பெயர்த்து எழுதுகின்றனர். வேறு சிலர் 'ஈன்ஸ்டின்' எனவும் ஐன்ஸ்ட்டைன்' என்றெல்லாம் ஒலி பெயர்ப்பு செய்து எழுதி வருகிறார்கள். இதில் எது சரியான ஒலிப்பு முறை?

மேலும், ஜெர்மானியப் பெயர்கள் ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும் வேறுபாட்டுடன் ஒலி பெயர்ப்பு செய்யப்படு கின்றன. இவற்றைத் தமிழில் ஒலி பெயர்ப்பு செய்யும்போது எத்தகைய முறையைப் பின்பற்றி ஒலி பெயர்ப்பு செய்வது என்ப நைப் பற்றி முனைப்பாகச் சிந்தித்து முடிவெடுத்துச் செயல்பட வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம் என்பதைத் தெளி வாகப் புரிந்து கொள்ள வேண்டுவது அவசியம்.

பிறமொழி எழுத்துகளும் தமிழும்

ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகளிலும் ஜப்பான் போன்ற கீழை நாட்டு மொழிகளிலும் அறிவியல். தொழில்நுட்பக் கருத்துகள் நாளும் மிகுதியாக இடம் பெற்று வருகின்றன.