பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

188

பிறப்பு முதலே கலப்பு மொழியாக வளர்ந்துவந்த ஆங்கில மொழியையே அம்மொழி பேசும் வெள்ளையர்கள், ஆங்கிலத் தில் அளவுக்க திகமாக வந்து கலக்கும் பிறமொழிச் சொற் கலப்பை வெறுத்தொதுக்க முற்பட்டு 1918ஆம் ஆண்டில் தூய esthi $6.Quem go ĝuả + '$8D5 (So. lety for pure English) Gor by வித்து வளர்ந்து வருகிறார்கள் இன்றியமையா நிலையில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்த நேரிட்டால் அதனை சாய்வெழுத்து (ita'ics)களால் அச்சிடும் முறை கையாளப்பட்டு வருகிறது

ஜெர்மன் மொழியில் ஃ ரெஞ்சு மொழிச்சொற்கள் மிகுந்த அளவில் கலந்ததனால் ஜெர்மன மொழியின் தனித்தன்மை கெடுவதை உணர்ந்த ஜெர்மானியர்கள் ஃபிரெஞ்சு மொழிக் கலப்பைத் தீவிரமாகஎதிர்த்தனர். இதனால் ஃபிரெஞ்சு மொழிக் குப் பலியாகவிருந்த ஜெர்மன் மொழி தனித்தன்மை குன்றாத மொழியாக உலக அரங்கில் வளர முடிந்தது. இதே போன்று அரசியல் ஆதிக்கத் துணையோடு ஆங்கிலச் சொற்கள் அயர் லாந்து மொழியில் கலக்கத் தொடங்கின. ஆரம்பத்தில் இத னை ப் பொருட்படுத்தாத அயர்லாந்து மக்கள் வெகு காலத்திற் குப் பிறகு ஆங்கிலத்தின் துணையின் றி தங்கள் மொழி இயங் காது என்ற நிலை ஏற்படுவதை உணர்ந்து விழிப்புணர்ச்சி கொண்டு, ஆங்கிலக் கலப்பை எதிர்த்துப் ோரிடத் தொடங் கினர். அதன் பலன் இன்று ஐரிஷ் மொழியின் தனித்தன்மை காப்பாற்றப்பட்டதோடு ஆங்கிலத்திற்குச் சமமான பெருமை யோடு வளமாக வாழ்கிறது மற்றும் ரஷ்ய மொழி போலிஷ் மொழியில் கலக்கத் தொடங்கியது. ஆனால், போலிஷ் மக்கள் ஆரம்ப முதலே அதனை எதிர்த்தனர் அதன் பயனாக ரஷ்ய மொழிக்குச் சமமாகப் போலிஷ் மொழி வளர்ந்து வனப்போடு காட்சி தருகிறது. தூய துருக்கி மொழி இயக்க'மும் வலுவோடு இயங்கி வருகிறது பாரசீக மொழி, அரபி, சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளின் கூட்டுக் கலவையாக இந்தியாவில் உருவான உருது மொழி கூட "தூய உருது மொழி இயக்கத்தைத் தொடங்கி நடத்த ஆரம்பித்துள்ளது.

சொல்லாக்கத்திறன் இழக்கச் செய்யும் மொழிக் கலப்பு

பிறமொழிக் கலப்பினால் ஒரு மொழி புதிய சொற்களைப் படைத்து வழங்கும் தன்மையை இழக்க நேரிடும் என்பதற்கு மலையாள மொழி தக்க சான்றாக உள்ளது. 'வடமொழிச் சொற்களை வரையறையின்றி கட ன் வாங்கியதால் புதிய சொற் களைப் படைக்கும் சக்தியை மலையாள மொழி இழக்க நேரிட்