பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

186

களையே தேர்ந்து பயன்படுத்துவதில் காட்டமுற்படுவதில்ல்ை என்பது ஒரு கசப்பான உண்மையாகும். சான்றாக புஷ்பம்' எனும் சொல்லை "புட்பம் என்று தமிழொலிக்கேற்ப உருமாற்றம் செய்து கையாள்வதல் ஆர்வம் காட்டப்படுகிறதே தவிர "மலர்' என்ற அழகு தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதில் காட்டப்படு வதாகத் தெரியவில்லை. 'கஷ்டம்’ என்பதை 'கட்டம்' என மாற்றிப் பயன்படுத்த விழையும் தமிழுள்ளம், துன்பம். துயர், இன்னல், இடர் என துன்பத்தின் ஒவ்வொரு படி நிலைக்கு மேற்ப அமைந்துள்ள பொருளாழம்மிக்கத் தமிழ்ச் சொற்களைக் கையாள முனைவதில்லை. இவ்வாறு கிரந்த எழுத்துக் கலந்த தமிழ்ச் சொற்களை தமிழ் ஒலிக்கேற்ப எழுத்து மாற்றம் செய்து பயன்படுத்துவதன் மூலம் தங்கள் தனித் தமிழ்ப் பற்றை பறை சாற்றிக் கெ ள்ளக் கிடைத்த வாய்ப்பாகவே கருதி பலரும் செயல்படுகின்றனர். இருக்கும் தமிழ்ச் சொற்களை முறையோடு கையாள முற்பட்டாலே, இடையில் தமிழில் புகுந்த வட மொழிச் சொற்கள் இயற்கையான இறப்பை மேற்கொண்டு மறைந்து விடும் அல்லது மக்களால் மறக்கப்பட்டுவிடும்,

ஒலிபெயர்க்கத்தக்கவை

அறிவியலைப் பொருத்தவரை மூலச் சொல்லின் ஒலிக் குறிப்பை முழுமையாகப் பெறும் பொருட்டு கிரந்த வரி வடிவங் களைத் துணைக்கொண்டு பொருட் பெயர்கள், இடப் பெயர்கள், பெயர்ச் சொற்கள், அலகுகள் ஆகியவற்றை ஒலி பெயர்ப் பதன் மூலமே கருதிய பயனைப் பெற முடியும்.

சில சமயங்களில் கிரந்த எழுத்தோடு கூடிய சமஸ்கிருதத் தமிழ்ச் சொற்கள் ஒலியசை முறையில் சிறு வேறுபாட்டுடன் தமிழ் எழுத்தொலியை எளிதாகப் பெற்றுவிட இயலும். சான் றாக, சுவிட்சர்லாண்ட்’ என்பதை தமிழோசைக்கொப்ப சுவிட்சர்லாந்து என எழுதலாம், புஸ்தகம்’ என்பதை 'புத் தகம்’ எனக் குறிக்கலாம். தவிர்க்க இயலா இடங்களில் மட்டுமே கிரந்த வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒலிபெயர்ப்பில் வழுவும் மரபிலக்கணம்

ஒலிபெயர்ப்பில் பளிச்சிட்டு நிற்கும் மற்றுமொரு பிரச்சினை ஒலிபெயர்ப்பில் மரபிலக்கணத்தை முற்றாகப் பின்பற்ற வேண்டுமா என்பதாகும். இலக்கியப் படைப்பாளர்கட்கு வேண்டுமானால் இஃது ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அறிவியல் தமிழைப் பொருத்தவரை இது இடர்ப்பாடுடையதாகும்