பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

187

என்பது நினைத்தற்குரியது. தமிழ் இலக்கண மரபுப்படி டர,ல, போன்ற உயிர்மெய் எழுத்துகள் மொழி முதலில் வராது. அவற் றின் முன் உயிர் எழுத்துகளை அமைத்தே எழுத வேண்டும் என்பது விதி-ஆனால், அறிவியல் ஒலிபெயர்ப்பைப் பொருத்த வரை இம்முறை இடர்ப் எடுடையதாக உள்ளது. ரேடார்’ என்பதை இரேடார்' என்றோ, 'டீசல்" என்பதை இடீசல்" என்றோ ‘ரப்பர்’ என்பதை இரப்பர்’ என்றோ எழுதுவது நகைப்புக்கிடமாகிவிடலாம். எனவே மரபு வழுவிய முறையில் ரேடார், டீசல், ரப்பர் என்று ஒலிபெயர்ப்பதே பொருத்தமுடைய

தாக இருக்கும்.

அதே போன்று உயிரின்றி மெய் இயங்கா’ என்பதற் கொப்ப உயிர் மெய் எழுத்துகள் தனித்தியங்குமேயன்றி மெய் யெழுத்துகள் தனித்து இயங்காது என்பது தமிழ் இலக்கண விதி. ஆனால், அறிவியல் ஒலிபெயர்ப்பைப் பொருத்தவரை இவ்விதி முறையையும் சற்று நெகிழ்வோடு பின்பற்றுவதே நலம் பயப்ப தாக அமையும், சான்றாக Chloride' என்பதைத் தமிழ் ஒலி பெயர்ப்பாக க்ளோரைடு எனவும் Tasar என்பதை 'ட்டா சார்’ எனவும் ஒலிபெயர்ப்பதில் தவறில்லை தான்.

அறிவியல் மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை மொழி முதல் எழுத்துகள், மொழி இறுதி எழுத்துகள், மெய் மயக்கங்கள போன்றவற்றிலிருந்து சற்று வழுவி செயற்படுவதில் தவறில்லை. ஏனெனில், இயன்றவரை மூல ஒலிகளே பெ பர்ப்பிலும் இடம் பெறுதல் வேண்டும்.

ஆங்கில எழுத்துப் பெயர்ப்புச் சிக்கல்

அடுத்து, நமக்கெதிர்ப்படும் மற்றொரு ஆங்கில எழுத்துச் சிக்கல் F, ph ஆகியவற்றின் ஒலிபெயர்ப்பாகும். நெடு நாளைக்கு முன்பே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி செய்யப்பட்டுள் ளது. ஆய்ந்தவெழுத்தை (ஃ) பகரத்திற்கு முன் அமைத்து, பகர ஒலியை மென்மைப்படுத்தி 'ஃப்' F, ph எழுத்துகளுக்குப் பகர மாகத் தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகிறது சான்று. Francium ஃப்ரான்சியம், Hafnium ஹாஃப் யம் என ஒலிபெயர்க்கப்பட்டு வருகிறது.

அதே போன்று ஒலிபெயர்ப்பில் நாம் சந்திக்கும் சிக்கலான ஆங்கில எழுத்துகள் D. T ஆகியவைகளாகும். T ஆங்கில எழுத்து வன்மையான ஒலியையும் D எழுத்து மென்மையான ஒலியையும் கொண்டவையாகும். D எழுத்துத் தனித்து வரும் போது தமிழ் ஒலிப்பாக'டி'என்றே உச்சரிக்கலாம், அதேபோன்று