பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

188

T எழுத்து தனித்து இயங்கும்போது "ட்டி' என்று குறிப்பதே பொருத்தபாகும். சான்றாக, D.C.T. என்பதை 'டி.டி ட்டி’ என்று ஒலி பெயர்க்கலாம்,

அடுத்து நம்மை எதிர்நோக்கும் ஒலிபெயர்ப்புச் சிக் கல் சி.ஜி. (0,0), (B.P) ஆகியவைகளாகும். இவ்வெழுத்துகள் கிரந்தத்திலுள்ள வர்க்க எழுத்துகளைப் போன்றதாகும் இவற்றை ஒலிபெயர்க்க ஆங்கில முயற்சியைப் பின்பற்றுவதே சிறப்பாகும். t

வர்க்க எழுத்தொலி பெற குறியீடுகள்

ஆங்கிலத்தில் இல்லாத பிற மொழி ஒலிகளைப் பெற புதிய ஆங்கில வரிவடிவங்களை உருவாக்காமலே ஆங்கில எழுத்து களின் மேலும் கீழும் உரிய குறியீடுகளை அமைத்து, அத்தகைய ஒலிகளைப் பெறுகின்றனர். அதே போன்று தமிழில் இல்லாத 'க' கார, ச' கார வர்க்க எழுத்து ஒலிகளைப் பெற தமிழ் எழுத்துகளின் மேலும் கீழும் குறியீடுகளை அமைத்து, வர்க்க எழுத்துகளுக்கான ஒலியை இலகுவாகப் பெறலாம். இதன் மூலம் ஒலிபெயர்ப்பில் காணும் மிகப் பெரும் குறையை எளிதாகத் தீர்த்துவிடமுடியும்

"வல்லுநர் குழு வழி வகுக்க வேண்டும்

இதுபோன்ற ஒலிப்பியல் சிக்கல்களைத் தீர்க்க தனித்தனி முயற்சிகள் தலைதுாக்குவதைவிட அகன்ற தமிழறிவும் ஆழ்ந்த இலக்கணப் புலமையும் அறிவியல் உணர்வும் ஆக்கச் சிந்தனை யும் வாய்க்கப்பெற்ற வல்லுநர் குழு அமைதல் வேண்டும். மர பிலகணத்துக்கு நெகிழ்ச்சி தருவது, கிரந்த வர்க்க எழுத்து ஒலி வடிவங்களுக்கான குறியீடுகளை எவ்வகையில் உருவாக்குவது, எழுத்துப் பெயர்ப்பு, சொற்பெயர்ப்பு ஆகியவற்றுக்கான விதி முறைகளைப்பற்றியெல்லாம் ஆய்ந்து முடிவெடுத்து ஒலி பெயர்ப் புத் துறையைச் செம்மைப்படுத்துதல் ஆகிய பணிகள் மூலம் அறிவியல் துறையைச் செழிமைப்படுத்தலாம்.

இத்தகைய ஆக்க முயற்சிகளையும் அதன் விளைவாக உரு வாகும் ஒலிப்பு முறைகளையே இன்றையத் தமிழ் எதிர்நோக்கி யுள்ளது.