பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காலப்போக்கில் உருவான எழுத்து வளர்ச்சி

வளர்ச்சி என்பது எல்லாவற்றுக்கும் பொதுவானது ஆகும். அதிலும் பலதிறப்பட்ட மக்களால் பேசப்படும் மொழியில் ஏற் படும் மாற்றங்களும் திருத்தங்களும் அம்மொழியின் எழுத்து களையும் அவ்வப்போது பாதிக்கவே செய்யும். இதுவும் தேவை யின் நிமித்தமே ஏற்படுவதாகும்.இது தவிர்க்க முடியாததுங்கூட. தமிழ் எழுத்துகளிலும் அத்தகைய மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்பட்டே வந்துள்ளன என்பது வரலாற்று உண்மையாகும். வரலாற்றுப் போக்கில் ஆயும்போது இஃது தெள்ளிதின் புல னாகும்.

ஒலியும் மொழியும்

மொழியப்படுவது மொழி, ஒருவர் தன் கருத்தையும் உணர் வையும் மற்றவர்கட்கு தெளிவுறுத்த உதவும் சாதனமே மொழி யாகும். மொழியானது ஒலி வடிவமாகவும் வரிவடிவமாகவும் அமைந்துள்ளது.

ஒலிவடிவ மொழியை மனிதர்சுள் மட்டுமன்றி மிருகங்களும் பறவைகளும், ஏன், டால்ஃபின் போன்ற மீனினங்களும் கூட கையாள்கின்றன. தங்கள் கருத்தையும் உணர்ச்சியையும் ஒன்றுக்கொன்று புலப்படுத்திக் கொள்கின்றன.

சைகை மொழி

சில சமயங்களில் தங்கள் அங்க அசைவுகளை வெளிப் படுத்துவதன் மூலம் தங்கள் உணர்வுகளையும் விருப்பு வெறுப்பு களையும் வெளிக்காட்ட முயல்கின்றன. ஆனால், என்னதான் வரன்முறைகளோடு கூடியவையாயினும் இவைகளெல்லாம் வெறும் ஒலிக் குறிப்புகள் என்று அழைக்கப்படுமே தவிர மொழி யென்ற பெயரையோ சிறப்பையோ பெற முடியாது.

ஒலிவடிவும் வரிவடிவும்

ஒலிப்பில் வரன்முறையான விதிமுறைகளை வகுத்துப் பயன் படுத்தி வருவதோடு, அவ்வொலிப்புகளுக்கேற்ற வரிவடிவையும் உருவாக்கிப்பயன்படுத்திவரும் தனிச்சிறப்பு மனிதனுக்குமட்டுமே