பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

198

ஒடி ஒளிந்து கொள்வதுபோல் எதிரிகளாகிய பாரசீகர்கள், அஞ்சியோடி மறைய வேண்டும். இல்லையெ னில் அம்புக்கு இரையாக்கப்படுவார்கள் என எச்சரிப்பதே அதன் நோக்க மாகும்.

பட எழுத்துகள்

காலப்போக்கில் இம்முறையின் வளர்ச்சியாக சில பொருள் களின் அடையாளங்களை வரிவடிவில் படமாக எழுதிப் பயன் படுத்தினர். இப்போக்கு நாளடைவில் வளர்ச்சி பெற பட எழுத்து முறை உருவாகி மொழியை வளர்க்கலாயிற்று இம் முறையில் எழுந்தவையே எகிப்திய சித்திர எழுத்தும், சிந்துக சமவெளி மொஹஞ்சதாரோ, ஹாரப்ப குறி எழுத்தும் ஆகும். ஆஃப்ரிக்காவில் வாழ்ந்த ஆதி குடிகளும் இவ்வகை பட எழுத்து முறைகளையே பயன்படுத்தி வந்தனர் என அறிகிறோம்.

நீண்ட காலத்திற்குப் பின்னரே இவ்வகையான எழுத்துகள் ஒரு செம்மையான நிலையை எய்தின.

மாற்றமே வளர்ச்சிக்கு அடிப்படை

காலத்தின் தேவைக்கும் பயன்பாட்டிற்குமேற்ப ஒவ்வொரு மொழி எழுத்துகளின் தோற்ற அமைப்பு மாற்றப்பட்டும் திருத்தப் பட்டும் வந்துள்ளன மாற்ற திருத்தத்திற்கு உட்படாத மொழி எதுவு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால் அது வளர்ச்சி எனும் உயிர்ப்பை இழந்த செத்த மொழியாகத்தான் இருக்க முடியும்.

எனவே வளர்ச்சிபெற்று வரும் மொழிகள் பயன்பாட்டின் அடிப்படையில் மாற்றத்திற்குள்ளாக நேர்கின்றது. இந்நிலையே உலகெங்கும் உள்ள மொழிகள் அனைத்திலும் நீடித்து வரு கிறது.

தமிழ் எழுத்து மாற்றமும் வளர்ச்சியும்

தமிழ் எழுத்தின் வரிவடிவமும் மேற்கண்டவாறு ஒலி வடிவ நிலையினின்று வரிவடிவ நிலைக்கு மாற்றம் பெற்று வளரலா யிறறு. வரி வடிவத்திலும் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிலைகளில் மாற்றங்களையும் திருத்தங்களையும் பெற்று இன். றைய வரி வடிவ நிலையை அடைந்துள்ளதோடு, இன்னும் சிறப் பான மாற்ற திருத்தங்களையும் எதிர்நோக்கியுள்ளது.

18 象