பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

194

பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும்

ஒவ்வொரு மொழியும் பேச்சு வழக்கிலிருந்து எழுத்து வழக்கு எழுந்துள்ள போதிலும், இன்றும் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்குமிடையே வேறுபாடு இருந்தே வருகிறது. இவ் வேறு பாடு சில மொழிகளில் மிகுந்தும் சில மொழிகளில் குறைந்தும் காணப்படுகிறது. இஃது தவிர்க்க இயலா வேறுபாடுமாகும். பேச்சு வழக்கினும் எழுத்து வழக்குக்கே இலக்கண விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இத்தகை மொழி இலக்கணங்கள் வகுக்க வழியமைத்தவைகள் இலக்கி.ாங்களாகும். இலக்கியம் கண்ட

தற்கே இலக்கணம் என்பது நியதியாகும்.

தொல்காப்பிய இலக்கணம்

தமிழில் கிடைக்கும் நூல்களிலேயே காலத்தால் மிக முற் பட்ட நூலாகக் கருதப்படுவது தொல்காப்பியம்' ஆகும். தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது தமிழ் மொழி பேசிய மக்களின் வாழ்க் கைக்கும் இலக்கணம் வகுத்துக்கூறிய நூல் எனும் சிறப்பிற்குரிய தாகும். இவ்விலக்கண நூலை ஆயும்போது இஃது எழுதுவதற் குப் பன்னெடுங் காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்கள் எழுதபபட்டிருக்க வேண்டுமென்பது திண்ணம். எழுத்து, சொல், பொருள் என்ற வைப்பு முறை களைப் பார்க்கும்போது இலக்கிய வளர்ச்சியுங்கூட திறம்பட்ட தாக இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அத்துடன்

இலக்கண நூல்களும்கூட சில இருந்திருக்கலாம்.

தமிழுக்கு மட்டுமல்லாது இந்திய மொழிகளுக்கான இலக் கண நூல்களிலேயே காலத்தால் மிகமிக முற்பட்டதாக மொழி யியல் வல்லுநர்களால் கருதப்படும் இலக்கண நூல் தொல் காப்பியம் என்பது நமக்கெல்லாம் பெருமைதரும் செய்தியாகும்.

தொல்காப்பிய தமிழ் எழுத்து வடிவம்

தொல்காப்பியர் தன் இலக்கண நூலை எவ்வகையான தமிழ் எழுத்து வடிவில் எழுதினார் என்பது நமக்குத் தெரியாது. காரணம் தொல்காப்பியரோ அல்லது சங்கப் புலவர்களோ வள்ளுவரோ அல்லது இடைக்காலக் கம்பரோ எழுதி வைத்த மூலப்பாட ஓலைச் சுவடிகள் எதுவுமே கிடைத்திலது. ஏனெனில் ஒலைச் சுவடிகள் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாதவை. காலப் போக்கில் நைந்து அழியும் தன்மையன. எனவே, அவ்வப் போது பலராலும் எடுக்கப்படும் பிரதிகளே மக்களிடையே புழங்கி