பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
198

198

சித்தனைத் திறத்தையும் பண்பாட்டு உயர்வையும் கலைகளின் தனித் தன்மையையும் நன்கு அறிந்து, மிக உயர்வாகப்போற்றிய தாகத்தெரிகிறது. எனவே, திறமிக்கத் தமிழ்ப் புலமையாளர் களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் தன் அவைக் களத்தே பெற்றிருக்கலாம்.

தான் பின்பற்றிய புத்த சமய மொழியான பாலி மொழியைத் தொடக்கத்தில் ஏற்றுக்கொண்ட அசோகர் மிக எளிமையான வடிவமைப்புடன் கூடிய தாமிழி எழுத்துருவைப் பெரிதும் விரும்பி ஏற்று அதன் அடிப்படையில் அவர் ஆங்காங்கே நிலை நிறுத்திய ஸ்தூபிகளாகிய அசோகத் தூண்களில் பொறித்திருக்க லாம் என எண்ணுவதில் என்ன தவறிருக்க முடியும்? மொழி தமிழாகவும் எழுத்து தாமிழியாகவும் தமிழகக் குகை கல்வெட்டு களில் அமைந்ததுபோன்று, மொழி பாலியாகவும் எழுத்து தாமிழி யாகவும் அசோகர் ஸ்தூபிகளில் அமைந்திருக்கலாம் அல்லவா?

புலவர்களால் மட்டுமல்ல, பொதுமக்களாலும் கையாளப்பட்டது

“தாமிழி எழுத்துவடிவங்கள் அன்றைய கற்றுணர்ந்த புலவர் களால் மட்டுமல்லாது சாதாரண குடிமகனாலும் கையாளப் பட்டது என்பதைப் பல்வேறு சான்றுகளால் நன்கு அறிந்துணர முடிகிறது அதிலும் மிகமிகச் சாதாரணமான மண்பாண்டம் வனையும் குயவராலும்கூட பயன்படுத்தப்பட்டு வந்தது என் பதை பாண்டிச்சேரியை அடுத்த அரிக்காமேடு எனுமிடத்தில் கிடைத்த பானை ஒடுகளில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களி லிருந்து அறிந்து தெளிய முடிகிறது. கி.பி. முதல் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இப்பானைகளில் அவற்றை வனைந்து உரு வாக்கிய குயவர் தன் பெயரை அப்பானைகளில் பொறித்துள் ளார். இப்பானை எழுத்துகள் தமிழகக் குகை எழுத்துகளினின் றும் சிறுசிறு வேறுபாடுகள் அங்குமிங்குமாக காணப்படுகின் றனவே தவிர மற்றபடி இரண்டிலும் காணப்படும் எழுத்து ஒரே மாதிரியே அமைந்துள்ளன.

இதிலிருந்து "தாமிழி' எழுத்து வகையிலிருந்தே பிராமி முத லான இந்திய மொழிகள் அனைத்தும் எழுத்துருக்களை ஏற்றி ருக்கலாம் என்ற கருத்து அண்மைக் காலமாகக் கல்வெட்டாய் வாளர்களிடையேயும் வலுவடைந்து வருகிறது. அசோக ஸ்துபிகளில காணப்படும் பிராமி எழுத்திலிருந்து தமிழ்மொழி தன் எழுத்துகளைப்பெற்றது என்ற கூற்று பெரிதும் வலுவிழந்து வருகின்றது.