பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
199

199

மூவேந்தா ஆட்சியில் மொழி வேறுபாடு

சங்கம் தொடங்கித் தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் ஆண்டு வந்தனர் என்பது நாம் அறிந் ததே. இம்மூன்று நாடுகளிலும் தமிழே வழங்கி வந்தது.

ஆயினும், சேர, சோழ, பாண்டிய நாடுகளில் முழுக்க தமிழே வழங்கி வந்தபோதிலும் எழுத்தமைப்பில் சிற் சில மாறுதல் களோடு எழுதப்பட்டு வந்தன. காரணம், மூவேந்தர்களும் பகைமை பாராட்டி வந்ததால் தங்களுக்கென தனித்துவத்தை மொழியில், எழுத்தில் கையாள முனைந்தனர். ஒவ்வொரு நாட் டிலும் வழங்கிய தமிழ் எழுத்துகளில் தங்கள் பகுதி எழுத்துக் கென ஒருவித தனித்துவத்தன்மை இருக்கும் வகையில் இந்த எழுத்து மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டதாக மொழியிய லாளர்களால் கருதப்படுகிறது.

வட்டெழுத்து

இவ்வகையில் சேரர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட தமிழ் எழுத்து வடிவம் "வட்டெழுத்து' என அழைக்கப்பட்டது எழுத்துகள் ளைந்து வட்ட வடிவில் அமைந்த கோடுகளைத் தன்னுள் கொண்டு அமைந்த எழுத்துகளே வட்டெழுத்துகள் என அழைக்கப்பட்டது.

கோலெழுத்து

இவ்வாறே பாண்டியர்கள், சேர நாட்டினர் கையாண்ட வட்டெழுத்து முறையினின்றும் சற்று மாறுபட்டதாக, கனித்துவ முடைய எழுத்துகளாக அமைய வேண்டி கோலெழுத்து முறை யைக் கடைப்பிடித்துத் தமிழைக் கையாளத் தொடங்கினர். எழுத்துகள் நீள் வடிவில் அமைவது கோல் எழுத்து முறை யாகும்

வட்டெழுத்தும் கோலெழுத்தும் இணைந்த தமிழெழுத்து

சோழப் பேரரசர்கள் பாண்டிய நாட்டை வென்று தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திய பின்னர் சோழ நாட்டிலும் பாண் டிய நாட்டிலும் உள்ளவர்கள் வட்டெழுத்தும் கோலெழுத்தும் கலந்த தமிழ் எழுத்துகளைக் கையாண்டு வந்தனர். சோழரின் இவ்வெழுத்து முறையே காலப்போக்கில் நிலைபெற்று இன்று வரை நிலவி வருகிறது.