பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
202

202

தமிழ் எழுத்துகளில் காலந்தோறும் ஏற்பட்டு வந்த மாற்றங் களையும் திருத்தங்களையும் தெளிவாக அறிந்துணரலாம் இன் றுள்ள செம்மையான நிலையைத் தமிழ் எழுத்துகள் பெற எத் தனையோ ஆண்டுகள் ஆகியுள்ளன என்பதும் கருத்திற் கொள்ளத்தக்கதாகும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற் றாண்டு வரை அதாவது ஐந்நூறு ஆண்டுக்காலம் தமிழ் எழுத்து களின் வரிவடிவில் பெரிதாக எந்த மாந்றமும் ஏற்பட்டு விட வில்லை. ஆனால், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் தமிழ் வரிவடிவில் புதிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அதிலும் மெய் எழுத்துகளிலும் உயிர் மெய் எழுத்திலும் இத் தகைய மாற்ற திருத்தங்கள் ஏற்பட்டனவே தவிர, உயிர் எழுத்து வடிவில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்துதான் உயிர் எழுத்துகளின் வரிவடிவில் புதிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

தமிழ் எழுத்துகளின் வரிவடிவில் செம்மையான வடி வொழுங்கு ஏற்பட்டது கி.பி. ஆறாம் நூற்றாண்டிலாகும். இக் காலம் பல்லவர் காலமும் ஆகும்.

கிரந்த எழுத்துத் தோற்றம்

பல்லவர் காலத்தில் ஒரு புதுவகை எழுத்துமுறை உருவாகி யது. இஃது நீண்டகாலத் தேவையின் அடிப்படையில் இவ்வகை எழுத்து முறை எழுந்தது. இவ்வெழுத்து வகையே "கிரந்த எழுத்து' என அழைக்கப்படுவதாகும். இவ்வகை எழுத்து முறை தமிழகத்தில் தோன்றுவத்ற்கு முழுமுதற் காரணமாய் அமைந் தவை வவதீக, சமண, பெளத்த சமயங்களேயாகும்.

கிரந்த எழுத்துகள் எழக் காரணம்

இச் சமயங்களின் மூல பாடங்களையும் சமயச் சொற்களை யும் உச்சரிட்புத்தன்மை சிறிதும் மாறாது தமிழில் ஒலிபெயர்ப் பாகச் சொல்ல விழைந்தனர். இதற்கேற்ற ஒலிப்பு எழுத்துகள் தமிழில் இல்லாததைப் பெருங்குறையாகக் கருதினர். மேலும் சகார, ககார வர்க்க எழுத்துகள் தமிழில் இல்லாததால் வட மொழி ஒலிப்புடன் தமிழில் சொல்வது இயலாததாக இருந்தது. இந்த ஒலிக்குறைபாட்டை நீக்குவான் வேண்டி, புதியவரிவடிவங். களை உருவாக்கினர். அவையே கிரந்த எழுத்து வரி வடிவங்கள் கிரந்தம்' என்ற வட சொல்லிற்கு நூல்" என்பது பொருளாகும். சமஸ்கிருதம் போன்ற வடயொழி நூல்களைத் தமிழில் தர வாய்ப்