பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

204

தவிர மற்றைய கிரந்த எழுத்துகள் இன்று மக்களின் பார்வை யினின்றும் ஓரளவு மறைந்துவிட்டன என்றே கூறலாம்.

எஞ்சிய கிரந்த எழுத்துகளும் அறிவியல் கலைச் சொற்களும்

இவ்வெழுத்துகள் எந்த மொழி உச்சரிப்பையும் தவறின்றி தமிழில் தரமுடியும் என்பதை செயல்பூர்வமாக எண்பித்து வந்தா லும் கூட தவிர்க்கவியலா இடங்களில் அறிவியல் கலைச் சொற்களில் மட்டுமே இவ்வெழுத்துகளைப் பயன்படுத்தும் போக்கே நிலவி வருகிறது.

எழுத்துச் சீர்மை கண்ட விாம்ா முனிவர்

தமிழ் எழுத்து முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை யும் திருத்தங்களையும் செய்து தமிழ் வரிவடிவத்தைச் சீர்திருக் திய பெருமை கிருத்துவ சமயப் பாதிரியாராகிய பெஸ்கி எனும் வீரமா முனிவரையே சாரும்.

அவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் குறிப்பாகவும் சிறப்பாகவும் கூறப்படுவது எ கர ஒ’ கர எழுத்துகளில் செய்த திருத்தங்களாகும்.

அவர் காலம் வரை "எ" கர, ஓ கர குற்றெழுத்துகளும் நெட்டெழுத்துகளும் வேறுபாடின்றி எழுதப்பட்டு வந்தன.

இந்த முறையைச் சற்றே மாற்றக் கருதிய வீரமா முனிவர் குற்றெழுத்தின் மீது புள்ளியிட்டும் நெட்டெழுத்தின் மீது புள்ளி யிடாமலும் பயன்படுத்தும் திருத்தமுறையைக் கொண்டு வந்தார். சான்றாக,

எ, ஒ, செ. கொ-குற்றெழுத்துகள் எ, ஒ கெ, கொ-நெட்டெழுத்துகள்

நாளடைவில் இந்தத் திருத்தமும் மாற்றப்பட்டு எ,ஒ நெட் டெழுத்துகளின் கீழே நீள வட்டத்தில் சிறு கோடும் சுழித்த கோடும் அமைக்கப்பட்டு ஏ, ஓ நெட்டெழுத்துகளாகப பயன் படுத்தப்படலாயின. அம்முறையே இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.

மேலும் உயிர்மெய் எ கர ஒ கர எழுத்துகளில் குறிப்பிடத் தக்க மற்றொரு திருத்தத்தை வீரமா முனிவர் கொண்டுவந்தார். பண்டுதொட்டே 'எ'கர ஒ'கர குற்றெழுத்துகளுக்கு மேலே