பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

205

புள்ளியிட்டு எழுதி வந்தது போன்றே, 'எ'கர ஒ'கர உயிர்மெய் குற்றெழுத்துகளுக்கு மேலே புள்ளியிட்டு எழுதி வந்தனர்.

சான்றாக, க்ெ. ப்ெ, ச்ெ-குற்றெழுத்து. புள்ளியிடப்படாத 'எ'கர ஒ'கர உயிர்மெய் எழுத்துகளை நெட்டெழுத்தாகக் கொண்டு கற்று வந்தனர்.

சான்றாக, கெ, பெ, செ-நெட்டெழுத்து

ஒற்றைக் கொம்பைப் பெற்ற இவ்வெழுத்துகள் குற்றெழுத் தாகவும் நெட்டெழுத்தாகவும் அதிக வேறுபாடின்றிஅமைந்திருந் தது. விரைந்து படிக்கும்போது சிற்சில சமயம் குழப்பம் ஏற் படுத்துவதாக அமைய நேர்ந்தது இயல்பே.

எனவே, இக்குழப்பத்தை நீக்கி, எழுத்துகளிடையேயான வேறுபாட்டை எளிதாக அறியும் வகையில் ஒற்றைக் கொம்பை மேற் பகுதியில் சுழித்து, இரட்டைக் கொம்பாக்கி எழுதுவதன் மூலம் நெட்டெழுத்தாகப் பயன்படுத்த வழி கண்டார்.

சான்றாக, கே, கோ.

இவ்வாறு எழுத்துகளில் வீரமா முனிவர் செய்த சீர்திருத்தங் கள் குழப்பம் ஏதுமின்றியும் தட்டுத்தடங்களின்றியும் படிக்கவும் எழுதவும் வாய்ப்பேற்படுத்தித் தந்தது.

அச்சு இயந்திரப் பெருக்கத்தால் உருவான புதிய சூழ்நிலை யில் விரைவாகவும் நிறைவாகவும் தமிழ்மொழி எழுத்துகளைக் கையாள இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் வேக முடுக்கியாக அமைந்தன எனத் துணிந்து கூறலாம்.

அண்மைக் கால எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனை

அச்சு இயந்திர வளர்ச்சியோடு தமிழ் தட்டச்சுப் பொறி களின் பெருக்கமும் இணைய, தமிழ் எழுத்துச் சீர்மை பற்றிய சிந்தனைகள் ஆக்கபூர்வமாக உருவாகியது.

தமிழின் தனித் தன்மைக்கு ஊறு நேராமாலும் மரபு மாறா லும் இவ்ைெழுத்துச் சீர்மை பற்றி சிந்திப்பதில் தவறேதும் இல்லை.

இன்றைய பெரியார் எழுத்துச் சீர்மை உணர்வு தோன்று வதற்குத் தோற்றுவாயாக அமைந்தது 1884ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தமிழன்பர் மாநாடாகும், அம்மாநாடு