பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

207

கணினிக்கேற்ப எழுத்துச் சீர்மை

எந்த மொழியாயினும் அஃது கணினிப் பொறிக்குள் புகுந்து வரவில்லையெனில் அஃது எதிர்காலத்திற்கேற்ற வளர்ச்சி யையோ வலுவையோ பெறாது இறந்தொழியும் என்ற மனப் போக்கு எங்கும் அழுத்தம் பெற்று வருகிறது. தமிழைப் போன்ற பழமைச் சிறப்பும் தனித்தன்மையும் கொண்ட சீனம் போன்ற மொழிகளெல்லாம் கணினிக்கேற்ப மாற்ற திருத்தங்களைப் பெற்றுச் சீர்மையடைய முனைந்துவிட்டன.

எழுத்துச் சீர்மைக்கு எதிர்ப்பு

ஆனால், தமிழ் எழுத்துகளிலும் அத்தகைய சீர்மையைக் காண முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறத் தொடங்கும்போதே இதற்குச் சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்ப முனைகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இலக்கியப் புலவர்

களாவர். இவர்கள் த்ங்கள் போக்கால் தமிழ் ஆர்வம், அறிவியல்

வளர்ச்சி ஆகியவைகளைப் பற்றிச் சிந்திப்பதைக் காட்டிலும் தங்கள் தமிழ் பக்தியை வெளிக்காட்டிக் கொள்வதிலே அதிக

வேகம் காட்டுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

இருப்பதைக் காப்பதா? வளர்ப்பதா?

இத்தகைய உணர்வாளர்கள் காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப தமிழை வளர்க்க வேண்டும். வளப்படுத்த வேண்டும் என ஆக்கவழியில் சித்திக்க முயல்பவர்களாகத் தெரியவில்லை தமிழ் எழுத்தின் கடந்தகால வளர்ச்சிப் போக்கு களை உய்த்துணராதவர்களாக, சங்க காலம் முதலே தமிழ் எழுத்து எவ்வித மாற்ற திருத்தங்கட்கு உட்படா நிலையில் அன்று போலவே இன்றும் இருப்பதாக எண்ணி, அதே நிலை யில் இனியும் இருக்குமாறு பாதுகாப்பதே தம் தலையாய பணி எனக் கருதி, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் வகை யில் செயல்பட முனைகின்றனர்.

இத்தகையவர்களின் போக்கு காலத்திற்கேற்ற வளர்ச்சிப் பாதையிலிருந்து தமிழைத் தடுமாறச் செய்வதோடு, தமிழின் வளர்ச்சிக்கும் தமிழர் தம் முன்னேற்றத்திற்கும் மறைமுக முட்டுக் கட்டையாக அமைய நேரிடுவதை ஏனோ உணர்வதில்லை.

தவறான எண்ணமே எதிர்ப்புக்குக் காரணம்

இவர்கள் இவ்வாறு தவறாக எண்ணுவதற்குக் காரணம் "எழுத்துச் சீர்மை"யைப் பற்றிக் கொண்டிருக்கும் தவறான கண் னோட்டமே யாகும்.