பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

மொழிச் சிறப்பால் பெருமிதம்

அன்னியர் ஆட்சி தொடர்ந்ததாலும் ஆங்கிலேயர் ஆட்சி நீண்டகாலம் நீடித்ததாலும் தமிழ்ப்பற்றும் தமிழறிவும் தேய்பிறை யாக இருந்ததில் வியப்பில்லை. ஆட்சி மொழி, சமயமொழி என்ற தகுதியினைப் பெற இயலாத மொழியாக இருந்த தமிழைப் பேணி வளர்க்கும் மனப்பாங்கும் இல்லாதொழிந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிமீது வெறுப்புணர்வை வளர்க்க முனைந் தோர் மக்களிடையே நாட்டுப்பற்றை ஊட்டி வளர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக இனப் பெருமையும் மொழிச்சிறப் பும் கலை, பண்பாட்டுத்திறமும் பெரிதும் நினைவுகூறப்பட்டன. திராவிட இயக்க வளர்ச்சி இத்தகைய உணர்வுகளைக் காட்டாற்று வெள்ளமெனத் தமிழகத்தில் பொங்கிப் பரவப் பெரும் தூண்டுதலாயிற்று.

தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் இழிவாகக் கருதிய போக்கு விரைந்து மாறியது. தமிழில் பேசுவதிலும் எழுதுவதிலும் தனிப் பெருமை கொள்ளும் இனிய சூழ்நிலை எழுந்தது. இதன் விளைவாகத் தமிழ் இனத்தின் பழம்பெருமையும் தமிழ் மொழியின் தனிச் சிறப்பும் பழந்தமிழ் இலக்கியச் செழுமையும் பற்றிய பெரு மித உணர்வும் முன் எப்போதையும்விட மிகுதியாகத் தமிழ் மக்களை ஆட்கொண்டது.

தமிழின் பெருமையை, அதன் தொன்மைச் சிறப்பை, அதன் ஆழங்காண முடியாத வன்மையைப் பற்றியெல்லாம் பேசுவதிலும் எழுதுவதிலும் நம்மவர் அடை கிற மகிழ்ச்சியும் பெருமையும் அலாதியானது. இன்னும் சொல்லப்போனால் உலகில் வேறு எந்தமொழி பேசும் மக்களாவது இந்தஅளவுக்குத் தங்கள் மொழி மீது பற்றும், அம்மொழியின் சிறப்பிலே பெருமையும் கொண்ட வர்களாக இருக்கிறார்களா என்பதே ஐயம் தான்.

தமிழினத்தின் பெருமை

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது; மொழிக்கு மட்டுமல்லாது

வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்துக்கூறும்தொல்காப்பியத்தைப் பெற்றது:உலகமொழிகளில் எங்கும் காணாத புதுமையாக இயல்,