பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
211

211

யில் தமிழைப் பயன்படுத்தும் முயற்சியில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பது நமக் ெல்லாம் மகிழ்வூட்டும் நற்செய்தி யாகும். இவற்றில் துணைவன்' சொற்றொகுப்புச் சாதன வழி தமிழோடு கிரந்த எழுத்துகளையும் பெற இயலும்.

கணினியில் எவ்வளவு அதிக எண்ணிக்கையிலான எழுத்து களையும் இடம் பெறச் செய்து, பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதற்கென நேரமும் சக்தியும் அதிகம் செலவாகும்.

ஆங்கிலத்தோடு தமிழும்

ஆங்கிலத்தில் இருபத்தியாறு வரிவடிவங்களைக் கொண்டே அம்மொழி அறிந்தோர் குறைந்த காலத்தில் குறைவான சக்தி யைச் செலவிட்டுப் பயன் பெறுகின்றனர். அதே வழியைப் பின் பற்றிப் பலனடைய விரும்பி இன்று பற்பல மொழியினரும் ஆங்கில ரோமன் வரி வடிவங்களில் தங்கள் மொழியை அமைத் துக் கொள்ள பேரார்வம் காட்டி வருகின்றனர்

தமிழின் வரிவடிவங்களான ரோமன் வரிவடிவங்களுக்கு மாற்றாமலே. எழுத்துச் சீர்மையைக் கைக்கொண்டு எழுத்துக் குறியீடுகளை மாற்றியமைப்பதன் மூலம், தற்போதுள்ள 124 குறியீ களை 34 குறியீடுகளாகக் குறைக்கலாம். இவ்வாறு குறைப்பதன் மூலம் தமிழ் வரிவடிவங்களை கணினியில் எளி தாகக் கையாள இயலும். அத்துடன் அச்சுப் பணி, தட்டச்சுப் பணி, தொலை எழுதி (Telex), தொலைப்பதிவி (Teleprinter) போன்ற பணிகளைக் குறைந்த கால அளவில் குறைந்த சக்தி யைச் செலவிட்டுக் காரியமாற்ற முடியும். இதன் மூலம் தமிழ் மொழியைக் கற்பதும் கற்பப்பதும் மிகமிக எளிதாக அமையும் என எழுத்துச் சீர்மையில் ஆர்வமுள்ள அறிவியல் தமிழ் ஆர் வலர்களும் தமிழறிஞர்களும் மொழியியலாரும் கருதுகின்றனர்.

மூன்று அடுக்கு வேண்டாம், ஒரே அடுக்குப் போதும் .

தற்போது நடைமுறையில் உள்ள தட்டச்சிலோ அன்றி கணிப்பொறியிலோ தமிழ் எழுத்துக் குறியீடுகளை ரோமன் வரி வடிவங்களை அமைப்பது போன்று ஒரே நேர் கோட்டில் அமைக்க இயலவில்லை. கி.கு எழுத்துகளை உருவாக்க க’ எழுத்தை முதலில் அமைத்து இ கசக் குறியீடான மேல்சுழிப்புக் கொம்புக் குறியீட்டை. அதன்மேல் அமைத்து 'கி' ஆக்க வேண் டும். 'கு' எழுத்தை அமைக்க 'க' எழுத்தை அமைத்து அதன் கீழ் அடுக்கில் 'உ' கரக் குறியீடான வளைவான சுழிப்புக் குறி