பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

மாறுதலுக்கேற்ப இலக்கண வளர்ச்சி

காலந்தோறும் ஏற்பட்டுவரும் புதிய புதிய சூழ்நிலைகள் மக்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைக்கின்றன.இப் போக்குக்கு இளைய சமுதாய மாற்றமும் வளர்ச்சியும் உருப் பெறகின்றன. இதனை அனுசரித்தே இலக்கியப் போக்கும் வளர்ச்சியும் அமைய இயலும். இலக்கிய வளர்ச்சிக்கும் தன் மைக்குமேற்ப பழைய இலக்கண விதிமுறைகள் தளர அல்லது மறைய புதிய இலக்கண விதிமுறைகள் உருவாகின்றன. ஏனெனில் இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்பது இலக்கியவியலாரின் அனுபவ மொழி.

இவ்வாறு காலந்தோறும் மாறி வந்த இலக்கணப் போக்கை யும் அதனால் இலக்கணவியல் மட்டுமல்லாது இலக்கியத் துறை யிலும் விளைந்த நன்மைகளை ஆய்வது சுவையான அனுபவ மாகும். வரலாற்று அடிப்படையில் இதை ஆய்ந்து தெளிவோம்.

சங்க காலத்தில் தொல்காப்பிய இலக்கணம்

சங்க காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட இலக்கண நூல் தொல்காப்பியமாகும். சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை தொல்காப்பிய இலக்கண விதிமுறைகளுக்கேற்பவே அமைந்தன வாகும்.

சங்க காலத்திலோ, அதனை அடுத்து வந்த காலத்திலோ தொல்காப்பிய இலக்கண நூலைத் தொடர்ந்து வேறு புதிய இலக்கண நூல் ஏதும் எழுதப்படவில்லை. ஆனால், இலக்கிய அமைப்பு முறைகளில், வடிவங்களில் மாற்றங்களும் திருத்தங் களும் காலத்தின் போக்கிற்கேற்ப தவிர்க்க முடியாதனவாக, இலக்கியப் படைப்புகளில் இடம் பெற்றே வந்தன. வடமொழி இலக்கணச் செல்வாக்கும் இலக்கிய அமைப்புமுறையும் தமிழிலே செல்வாக்கடையும்படியான சூழ்நிலையை சமயப் புலவர்கள், சமயத்தின் காரணமாக அழுத்தமாக ஏற்படுத்தி வந்தனர். இது ஒரு வகையில் தவிர்க்க முடியாததாகவும் அக்காலத்தில் கருதப் பட்டது.

எனவே, மாறிவரும் மாற்றங்களுக்கேற்ப புதிய தமிழ் இலக்கணம் வகுக்கப்பட வேண்டிய கட்டாயக் காலச் சூழல்