பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
219

219

சுருங்கிய அகப்பொருள் இலக்கணம்

எனவே, தொல்காப்பிய அகப்பொருள் இலக்கணத்தை ஏழி லிருந்து ஐந்தாகச் சுருக்கி எளிமைப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அதற்கிணங்க இவ்விலக்கண நூல் பெருந்திணை, கைக்கிளை எனும் இரு அகப்பொருள் திணைகளை நீக்கி அகப் பொருள் இலக்கணம் வகுக்கப்படலாயிற்று இஃது கடைச் சங்க கால இலக்கியப் போக்கை மனதிற்கொண்டு செய்த இலக்கண மாற்றமாகக் கொள்ளலாம்.

அத்துடன் இவ்வகப் பொருள் இலக்கண நூலுக்கு மிகச் சிறந்த உரையை இறையனார் என்பவர் எழுதி, இதனை மேலும் எளிமைப் படுத்திச் சிறப்படையச் செய்தார். இவ்வுரைச் சிறப்புக் கருதியே இவ்வகப் பொருள் இலக்கண நூல் இன்றள வும் இறையனார் அகப்பொருள்' என்றே வழங்கி வருகிறது.

இதே போன்று தொல்காப்பியர் வகுத்தளித்த புறத்திணை இலக்கணத்தையும் காலப் போக்கை யொட்டி மாற்ற திருத்தங் களுடன் புதிய வகையில் எடுத்துக் கூற வேண்டிய அவசியமேற் பட்டது. ஏனெனில், அக்கால இலக்கியப் புலவர்கள் தொல் காப்பிய புறத்திணைகளை முற்றாகப் பின் பற்றாது புதிய புதிய போக்குகளைக் கைக் கொண்டு இலக்கியப் படைப்புகளை உரு வாக்கினர். எனயே, மாற்றமடைந்தும் விரிந்தும் வரும் இலக் கணம் போக்குகளை அனுசரித்துப் புதியபுறத்திணை இலக்கணம் வகுக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு எழுந்த புதிய புறத்திணை இலக்கண நூலே புறப் பொருள் வெண்பா மாலை’ எனும் இலக்கண நூல்.

காலப் போக்குக்கேற்ற புறத்திணை இலக்கண நூல்

தொல்காப்பியத்தில் ஏழு திணைகளாகக் கூறப்பட்ட புறப் பொருள் விரிந்து பன்னிரண்டு திணைகளாகக் இப்புதிய இலக் கண நூலில் கூறப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தில் அகப்பொருளாகக் கூறப்பட்ட கைக் களை, பெருந்தினை ஆகிய அகத்திணைகள் இறைய னார் அகப் பொருளில் விடப்பட்டன. ஆனால் புறப்பொருள் வெண்பா இலக்கண நூலாசிரியர் இவ்விரு அகத்திணைகளையும் புறத் திணைகளாக மாற்றி ஏற்றுக்கொண்டதோடு புதிதாக கரந்தை, நொச்சி, பொதுவியல் ஆகிய புதிய புறத்திணைகளைத் தோற்று வித்து, பன்னிரண்டு புறத்திணைகளாக விரிவாக்கி, புதிய புறப்