பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

220

பொருள் இலக்கணம் வகுத்தார். அத்துடன், தொல்காப்பியப் புறத்திணை இலக்கங்களை மேலும் மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லாட்சியிலும் சொல்லும் முறையிலும் 'இறையனார் அகப்பொருள்' நூலைவிட எளிமை கடைபிடிக்கப் பட்டுள்ளது. இத்தகைய மாற்றமும் திருத்தமும் விரிவும் அக் காலத்தின் அவசியத் தேவையாகக் கருதப்பட்டது.

தொல்காப்பியத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பாவியல் இலக்கணம்

சங்க காலத்திற்குப் பின்னர் தொல்காப்பிய செய்யுளியலில் கூறப்பட்ட கட்டளையடி முதலான சில செய்யுளியல் இலக் கணங்கள் நாளடைவில் வழக்கொழிந்து போய்விட்டன.

எனவே, செய்யுளியலாகிய யாப்பிலும் பலவித மாற்ற திருத் தங்கள் ஏற்படலாயின. அதையொட்டி புதிய பாவியல் இலக் கணம் உருவாக வேண்டிய அவசியத் தேவை எழுந்தது இதன் விளைவாக அமித சாகர் எனும் சமணப் புலவா "யாப் ருங் கலம்,” “யாப்பருங்கலக்காரிகை' எனும் இரண்டு பாவியல் பற்றிய இலக்கண நூல்களை எழுதினார்.

யாப்பிலக்கணத் தோற்றம்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒரு பகுதியாக, செய் யுளியிலாக இருந்த யாப்பிலக்கணம காலத்தின் தேவையை அனு சரித்து தனி யாப்பிலக்கணம்’ எனும் செம்பையான தனி இலக் கணப் பிரிவாக உருவாக வேண்டிய அவசியம் ஏற்பட்ட தையே காட்டுகிறது.

வடமொழி ஆர்வமும் அணி இலக்கணமும்

வடபுல சமயங்களின் சாயலில் தமிழகத்தில் காலூன்றிய வட மொழி இலக்கிய, இலக்கணச் செல்வாக்கு சமயப் போர்வையில் நாளும் அதிகரித்து வந்தது. நாளடைவில் சமய அடிப்படை யில் வடமொழி இலக்கிய இன்பத்தில் மனதைப் பறிகொடுத்த தமிழ்ப் புலவர்கள் வடமொழி அணி இலக்கணத்திலும் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கியதில் வியப்பேதுமில்லை

தொல்காப்பியத்தில் உவம இயல்' என்ற பகுதி இடம்பெற் றிருந்ததே தவிர வேறு அணி இலக்கணம் எதுவும் தனியே கூறப் படவில்லை, வீர சோழியம் இலக்கண நூலில் ஐந்திலக் கணத்தின் ஒரு பகுதியாக அணி இலக்கணம்' கூறப்பட்டிருந்தது