பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
221

221

அதுவும் வடமொழி அணி இலக்கணத்தை அடியொற்றியே எழுதப்பட்டிருந்தது"

எனவே தமிழ் இலக்கியச் செழிப்புக்கு மேலும் வலுவூட்டவும் செல்வாக்குப் பெற்றுவரும் வடபுல இலக்கியத் திறத்தை முற்றாக உணரவும் வாய்ப்பேற்படுத்தும் வகையில் முதன் முறையாகத் தமிழில் அணி இலக்கணம் நூல் உருவாக்கப்பட்டது. அதைச் செய்ய முன் வந்தவர் சமண சமயப் புலவரான கண்டி என்பவர் ஆவார். அலையும் "காவ்யதர்சம்' எனும் வடமொழியில் அலங் கார இலக்கணம் கூறும் நூலையே மொழியாக்கமாக தமிழில் உருவாக்கினார். இவ்வாறு அக்காலத் தேவையை கருத்தில் கொண்டு இன்றியமையாது தேவைப்பட்ட அலங்கார இலக்கண மான அ ைஇலக்கண நூல் தமிழில் முதன்முதலாக வெளியாக் கப்பட்டது.

நாளடைவில் தண்டியலங்கார நூலினும் விரிவான அணி இலக்கண நூல் படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வடமொழியின் தமிழாக்கமாக வெளிவந்த தண்டி யலங்கார அணி இலக்கணத்தைத் தேவையான அளவு மாற்ற திருத்தங்கள் செய்து, அக்காலத்தில் கையாளப்பட்ட வேறு வகையான அணி இலக்கண விதிமுறைகளையும் சேர்த்து விரி வான முறையில் தமிழிலேயே உருவாக்கப்பட்டதே "மாறனலங் காரம்’ எனும் அணியிலக்கண நூல்.

கன்னூல் தோற்றம்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. காலப்போக்கில் தமிழில் உருவாக்கப் பட்டவை யாப்பும் அணியும். இவ்வைந்தையும் ஒருசேரவைத்து எழுதப்பட்டதே பவணந்தி முனிவரின் நன்னூல்’ எனும் இலக்கண நூல்.

தொல்காப்பிய இலக்கண நூலுக்கு அடுத்தபடியாக, காலத் திற்கேற்ப ஏற்பட்டுவந்த மாற்றங்களையெல்லாம் திறனாய்வு செய்து செம்மைப்படுத்தி, வகுத்துத் தொகுத்துத் தந்த பெருமை "நன்னூல் இலக்கண நூலா, ரியர் பவணந்தி முனிவரையே சாரும.

வடமொழி இலக்கணம் கூறும் தமிழ் இலக்கண நூல்

தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது தவிர்க்க முடியா நிலையில் தமிழோடு வந்து கலக்கும் பிறமொழிச் சொற்களின் எத்தகைய மாற்றத் திருத்தங்களுடன் ஏற்கலாம் என்பதற்கான புதிய விதி