பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21

தமிழ் என்று கூறும்போதே பலரும் இலக்கியத் தமிழைப் பற்றியே எண்ணுகின்றனர்; பேசுகின்றனர். இதுவரை தமிழ் இலக் கியத்தமிழாகத்தான் அதிகம் பயன்பட்டுவந்தது. ஆனால்இன்று நிலைமை பெரிதும் மாறிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.

அறிவியலை நோக்கிய தமிழ் வளர்ச்சி

நாம் அறிவியல் ஊழியில் வாழ்ந்துவருகிறோம். அறிவியலின் தாக்கம் உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்துள்ளது. அன்றாட வாழ்வில் அரையங்குல வாழ்வைக்கூட அறிவியலின்துணையின்றி நம்மால் நகர்த்த முடியவில்லை என்ற நடைமுறை உண்மையை நாம் உணர்ந்தேயாக வேண்டும். எனவே, அறிவியல் உணர்வை யும் அறிவையும் வளர்க்கும் வகையில் தமிழை வளர்க்க வேண்டி யது அவசியமாகும்.

ஏனெனில் காலப்போக்கில் வளர்ச்சி என்பது தவிர்க்க முடி யாத ஒன்று. ஆனால், அந்த வளர்ச்சி காலத்தின் போக்கை ஏற்பதாகவும் தேவையை நிறைவு செய்வதாகவும் அமைதல் வேண்டும். சாதாரண மக்களின் வாழ்க்கைக்கே வளர்ச்சிப் போக்கு அவசியமென்றால் அவர்களது உணர்வின் சிந்தனை வெளிப்பாடாக, அவர்களை ஒருங்கிணைக்கும் செயலூக்கியாக விளங்க வல்ல மொழி பல்லோரின் கூட்டுறவால் வளர்ச்சி பெற் றேயாக வேண்டும்.

அறிவியல் தமிழ் எனும் புதுத்துறையைப் பற்றிப் பேசும் போதே சில புலவர் பெருமக்கள் அச்சவுணர்வோடு புருவத்தைத் தூக்குகிறார்கள். அவர்கள் அச்சத்திலும் உண்மை இல்லாமல் இல்லை.

உரமிடலின்றி உயிர்ப்பேது

தமிழை அறிவியல் தமிழாக உருமாற்றி வளர்க்க முயலும் போது போதிய அளவில் மொழியிலும் இலக்கணத்திலும் எழுத் துரு அமைப்பிலும் மாற்றங்கள், திருத்தங்கள் ஏற்பட்டே தீரும், இந்த மாற்ற திருத்தங்ககளை ஏற்க அவர்கள் தயங்குகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு இருந்த தமிழை அதே நிலை யில வடிவில் வைத்துப் பாதுகாத்துப் போற்றித்துதிக்கவே அவர் கள் விரும்புகிறார்கள். இன்னும் வெளிப்படையாகக்கூறவேண்டு மென்றால் எந்த மாற்றங்களுக்கும் ஆட்படாதவாறு தமிழைப் பாதுகாப்பதே தங்களின் தலையாய பணி எனக் கருதுகிறார்கள். தமிழெனும் பயிருக்குக் காவலிருப்பதே தமிழுக்காற்றும் பணி