பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22

என்பது இவர்தம் உள்ளக் கிடக்கை, தாங்கள் காக்க முனையும் தமிழ்ப் பயிருக்குக் காலத்திற்கேற்ப உரமிட முயலமாட்டார்கள் உரமிட முனைவோரையும் ஆதரிக்கமாட்டார்கள். இம்முறையில் முன்பும் சில மொழிகள் உலகில் காக்கப்பட்டுள்ளன. அதனால், அம் மொழிகள் உயிர்ப்புத் தன்மையை இழந்து இன்று பெருங் காயக் கலையங்களாக மாறிவிட்டன. செத்த மொழி என்ற அடை மொழியோடு லத்தீன் மொழியும் இயங்கா மொழி என்ற மகுடத்துடன் சமஸ்கிருதமும் இன்றுஅமைந்திருப்பதற்கு இதுவே காரணம் என்பதை இவர்கள் இனியேனும் உணர்வது நல்லது தவறினால் காலமே அதை உணர்த்திவிடும் என்பது நிச்சயம்.

மற்றொரு பேருண்மையையும் நாம் மறந்து விடலாகாது. காலந்தோறும் தேவையின் அடிப்படையில் உருவாகி வளர்ந்து வரும் போக்குக்கேற்ப தமிழ் மொழியும் எழுத்தும் இலக்கியமும் மாற்றங்களையும் திருத்தங்களையும் ஏற்று வளர்ந்தே வந்துள்ளன என்பதே அது.

இலக்கணமும் மாற்றத்திற்கு உட்பட்டதே

சமூகப் போக்கை அடித்தளமாகக் கொண்டிருந்த தமிழ் இலக்கியம் சமண, பெளத்த, சைவ, வைணவ, கிருத்துவ, இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாக மலர்ந்து மணம் பரப்பியது. இலக்கியப் போக்குகள் மட்டுமல்லாது வடிவங்களும் காலந் தோறும் மாறிவந்துள்ளன என்பதே இலக்கிய வரலாறு உணர்த் தும் உண்மை. அவ்வாறே தமிழ் இலக்கணமும் பலவித மாற்ற திருத்தங்களுக்கு உட்பட்டேவந்துள் ளன. அதனாலேயே தொல் காப்பியத்திற்குப் பின்னர், இடைக்காலத்தில் ஒரு நன்னூல்' இலக்கண நூல் எழுதவேண்டியதேற்பட்டது அதற்கும் மாறு பட்ட இலக்கண முறைகள் இன்றையத் தமிழில் இலைமறை காயாக அமைந்து பயன் பட்டு வருகின்றன. தமிழ் எழுத்து களிலும் மாற்ற திருத்தங்கள் ஏற்பட்டே வந்துள்ளன. வட மொழி, பாலி, பிராகிருத, பிராமி எழுத்துகளின் உறவால் தமிழ் எழுத்துகளின் வடிவங்களே மாற்றமடைந்தன. சங்காலத் தமிழ் எழுத்துருவம் இன்றைய வரிவடிவில் இருக்கிறதா என்பதே பெரும் ஐயப்பாட்டிற்குரியது என்பதை மொழியாளர்கள் ஆய்வு பூர்வமாகக் கூறி வருகிறார்கள். தமிழில் இல்லாத ஒலிகளுக் கேற்ப புதிய வரி வடிவ எழுத்துகள் படைக்கப்பட்டு பயன்படுத் தப்பட்டன என்பதை கிரந்த எழுத்துகளின் தோற்றம் உணர்த்தி வருகிறது. சங்கம் தொடங்கி வீரமாமுனிவர் வரை தமிழ் மொழி எழுத்துரு மாற்றங்களை ஏற்றே வளர்ந்து வந்துள்ளது.