பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

அன்றையத் தமிழனின் அறிவியல் சிந்தனை

அறிவியல் அறிவையும் உணர்வையும் வளர்க்க அறிவியல் தமிழ் உருவாக வேண்டும் எனக் கூறவேண்டுவதில்லை. அறிவி யல் தமிழ் மூலம்தான் அறிவியல் அறிவையும் உணர்வையும் வளர்க்க வேண்டும்மென்றால் முந்தையத் தமிழனுக்கு அறிவியல் சிந்தனை அறவே இல்லையா, அதை ஊட்டி வளர்க்கத் தமிழ்

மொழி தவறிவிட்டதா என்று கேள்விக்கணைகள் தொடுக்கப் படலாம்.

சங்க காலத் தமிழனும் அதற்கு முந்தைய தமிழனும் கூட அறிவியல் சிந்தனை வளத்தோடு திகழ்ந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தனை யின் சுவடுகூடப் படாத, சங்க காலத் தமிழரிடையே இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவியல் பற்றிக் கொண்டிருந்த கருத்தும் சிந்தனையும் சில சமயம் நம்மை வியக்கவைக்கின்றன.

நாம் வாழுகின்ற இந்த நிலவுலகு பற்றிய தெளிவான சித்த னைகள் சங்கத் தமிழர்களிடம் அழுத்தமாகப் படிந்திருந்தது என்பதை சங்கப் பாடல்கள் பலவற்றில் கண்டு மகிழமுடிகிறது. இந்நிலவுலகானது மண், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்களால் ஆகியது என்பதை

"மண்டினிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலை இயநீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத் தியற்கை (புறம் 2) என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் வரிசைப்படுத்திக் கூறுகிறது.

அதன் வளர்ச்சியாக வானத்திலிருந்து காற்றும் காற்றி லிருந்து தீயும், தீயிலிருத்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றி யதை,

"கருவளர் வானத் திசையிற் றோன்றி

உருவறி வாரா ஒன்றன் ஊழியும் உந்துவளி கிளர்ந்த ஊழுழ் ஊழியும் செந்திச் சுடரிய ஊழியும் பனியொடு