பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30

கடல் கடந்த தமிழரின் அறிவியல் ஆற்றல்

தமிழன தன் அறிவியல் அறிவை,நுட்பத்திறனை கிழக்காசிய நாடுகளான கம்போடியாவில் “ஆங்கோர் வாட் ஆலய அமைப் பிலும், இந்தோசீன போரோ.புதூர் புடைப்புக் சிற்பங்களிலும் வெளிப்படுத்த யுள்ளதை உலகப் புகழ் பெற்ற தொல்பொருளாய் வாளர்கள் வியப்புடன் வெளிப்படுத் சியுள்ளனர் என்பது இக் காலத் தமிழர்களை வியப்பிலாழ்த்தும் செய்திகளே என்பதில் ஐயமில்லை.

அது மட் மா, தமிழ் நாட்டு மலைப் பகுதிகளில் ஐவனம்' போன்ற தானியங்களை விவசாயம் செய்வதிலும், பயிரிடும் முறையிலும் நிலத்தைப் பயன்படுத்தி மழை நீர் அரிப்பில் பாது தடுப்பதிலும் தனித்திறமை பெற்றவர்களாகத் தமிழர்கள் பண்டு திகழ்ந்தார்கள். இந்த முறையை அவர் தள் வணிக நிமித்த மாகவோ அன்றி வேறு காரணங்களுக்காகவோ தாங்கள் சென்ற வெளிநாடுகளிலெல்லாம் பரப்பியுள்ளார்கள். குறிப்பாக, ஆஃப் ரிக்க நாடுகளில் மலைப்பகுதிகளில் பயிரிடும் முறையை அறி முகப்படுத்தியவர்கள் தமிழர்களே என்பதற்கான ஆதர்ரங்களை ஃபிளமிங் போன்ற புகழ்பெற்ற ஜெர்மானிய பொறிவியல் வல்லு நர்கள் ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்கள்.

மேலும், எத்தியோப்பியாவில் உற்பத்தியாகி எகிப்து வழி யாக ஓடி அலெக்சாந்திரியாவில் கடலில் வீணே கலந்துவந்த நைல் நதியால் எகிப்து எவ்விதப் பயனையும் பெற இயலாமலே நீண்ட காலம் இருந்தது. நீரை தரை உறிஞ்சாமலும் அணையில் நீர்க்கசிவு ஏற்படாமலும் சமதளத் தரையில் அணை கட்டும் கட்டுமான தொழில் நுட்பத்திறனை தமிழர் மட்டுமே பெற்றிருந் தனர் என்பதற்கு இன்றும் காட்சியாக விளங்குவது கல்லணை ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்த தமிழர்களின் நீரியல் நுட்ப அறிவை வணிகர்கள் மூலம் அறிந்த எகிப்து நாட்டின் பாரோ மன்னர் கள், தமிழ்நாட்டு நீரியல் கட்டுமான வல்லுநர்களை எகிப்து நாட்டிற்கு வரவழைத்து, நைல் நதியில் அணைகளை ஆங் காங்கே கட்டச் செய்தனர். அதன் விளைவாகவே பாலைவன மாகக் காட்சியளித்த நைல் நதிப் பகுதியைச் சோலைவனமாக மாற்ற முடிந்தது இதனால், எகிப்தின் வளம் மட்டுமல்ல, இதனால் அந்நாட்டின் வரலாறே அடியோடு மாறிவிட்டது என் பதைத் தக்க ஆதாரங்களுடன் ஜெர்மானியப் பொறியியல் அறிஞர் ஃபிளமிங் தன் நூல்களில் தெளிவாகக் கூறியுள்ளார்.