பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31

அறிவியல் உணர்வை விஞ்சிய சமயச் சிந்தனை

சமயங்களின் வளர்ச்சிப் போக்கு தமிழனின் வாழ்வில் பல மேடு பள்ளங்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தியதன் விளைவாக காலப்போக்கில் இச்சிறப்புத் தன்மைகள் தேயத் தொடங்கின.

இதற்குக் காரணம், சங்கம் மருவய காலங்களில் வைதீக சமயமும்-அதனைத் தொடர்ந்து தமிழகம் வந்த சமண, பெளத்த சமயங்களும் பண்ணுலக வாழ்க்கையில் கருத்தைச் செலுத்தி வந்த தமிழனை-விண்ணுலகில் வாழ்வதாகக் கூறப்பட்ட தேவர் களின் வாழ்க்கை மீது ஆர்வமும் அக்கரையும் பிடிப்பும் கொள்ளச் செய்து விட்டன.

தனது வாழ்வை அகமாகவும் புறமாகவும் கண்டு வந்த தமிழனை காலப் போக்கு இகமும் - பரமும் பற்றியே சிந்திக்கச் செய்துவிட்டன. விதி என்னும் புதிய தத்துவம் சிந்தனைக்கு வேலியாகவும் செயலுக்குத் தடையாகவும், மன எழுச்சிகளை அடக்கும் மயக்க மருந்தாகவும் அமையவே, திரைகடலோடி திரவியம் தேடும் அவனது பொருள் வேட்கையும் வீரத்தையே தன் அளவுகோலாகக் கொண்டிருந்த அவனது வீர உணர்வும் நாளடைவில் தேய்ந்து பழங்கதைகளாகிப் போயின. அவனது அறிவியல் பூர்வமான சிந்தனையோட்டமும் பொதுநல உணர் வும் செயலும் சமுதாய நலத்தை நோக்கி நடை போடுவதற்கு மாறாகத் தான் மட்டும் சுவனப் பேறு பெற்றால் போதும் என்ற தன்னல வேட்கையோடு கூடியதாயமைந்தது. இதனால் அவன் வாழ்க்கைப் போக்கும் மாறியது. வானம், பூமி, தன் வாழ்க்கைச் சூழல் அனைத்தையுமே சமய அடிப்படையில் காண்பது அவனுக்குத் தவிர்க்க முடியாததாக ஆகியது.

ஐரோப்பியர் வருகையும் நம்மவர் நிலைமையும்

ஆங்கிலேயர் இந்நாட்டிற்கு வந்து சேரும்வரை, இந் நிலையே இருந்தது எனக் கூறலாம். அதுவரை தமிழர் அறி வியலைப் பொருத்தவரை எந்த அளவுக்கு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர் என்பதை மயிலை சீனி வேங்கடசாமி அவர் கள், தன் நூலில் கீழ்க் கண்டவாறு விவரித்துள்ளார்:

'ஐரோப்பியர் வருவதற்கு முன்னே விஞ்ஞான நூல்கள் (வான நூலைத் தவிர) தமிழ் மொழியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் இருந்தன இல்லை. எவையேனும் இருந்தனவென் றால் அவை உண்மைக்கு மாறான கற்பனைக் கதைகளாகத் தான் இருந்திருக்கக்கூடும். பால், தயிர் நெய், கருப்பஞ்சாறு