பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

காலத்தமிழ் மக்களின் அறிவியல் சிந்தனையிலும் வெற்றியிலும் மிகுந்த நம்பிக்கையுடையவராகத் திகழ்ந்தவர். தமிழ் மக்கள் அறிவியல் உணர்வும் அறிவும் பெறவேண்டும் எனத் துடித்தவர்.

விடுதலை பெற்ற நம் நாடு எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்று வையகத்திற்கோர் முன மாதிரியாகத் திகழ வேண்டும் என கனவு கண்டார். குறிப்பாக வாழ்வின் எல்லா அம்சங்களி லும் இடையறாது இழையோடி நிற்கும் அறிவியல் துறையில் எண்ணற்ற சாதனைகளை இயற்ற வேண்டும் என்பது அவரது இலட்சிய நோக்கு.

'வானையளப் போம்கடல் மீனையளப் போம் சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்'

என எதிர்கால அறிவியல் சாதனைகள் பற்றிய ஆசைக் கனவு களை தம் பாடல்களில் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார்.

தமிழின் பெருமையைப் பேசினாலே போதும் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தி விட்டோம். தமிழுக்கு ஆற்ற வேண்டிய கடமை யையும் செய்து விட்டோம் எனத் தன் முதுகில் தானே தட்டிக் கொள்ளும் இக்கால விந்தைத் தமிழரிலும் வேறுபட்டவராக விளங்குபவர் பாரதியார்.

கால வேகத்திற்கேற்ப எல்லா வகையினும் ஈடுகொடுக்க வியலாமல் வளர்ச்சி குன்றி தமிழ் எங்கே பின் தங்கிவிடுமோ என எண்ணித் துடித்தவர். அதற்கு இடையூறாக இருக்கும் தடைகளை உடைத்தெறியத் தூண்டியவர். நம்மீது அழுத்த மாகப் படிந்துள்ள தூசி துடைக்கப்பட வேண்டும். இயன்ற வரை பயனற்ற பழையவற்றைக் கழிக்க வேண்டும். புதிய வற்றைப் புகுத்த வேண்டும் எனத் துடித்தவர்.

வீணே பழம் பெருமை பேசித்திரிவோரை நோக்கி,

'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை'

என்றார்.

இத்தகைய பழைமை மனப்போக்கைச் சாடுவதோடு, காலத் தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் முறையில் நாம் ஆற்ற வேண் டிய பணியை நினைவுறுத்தும் வகையில் பாவேந்தர் பாரதி

தாசனார்.