பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

சொல்லவும் கூடுவதில்லை அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக் கில்லை; மெல்லத் தமிழினிச் சாகும்- அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என் றந்தப் பேதை உரைத்தான்-ஆ! இந்த வசைஎனக் கெய்திட லாமோ?"

எனத் தமிழ் மக்களை நோக்கித் தமிழ்த்தாய் வருந்துவது போல் பாடினார். இப்பாடலின் ஒவ்வொரு சொல்லிலும் தன் ஆதங் கத்தை ஆசைக் கனவுகளை உணர்ச்சிக் கவிதைகளாக உள்ளத்தைத் தொடும் வண்ணம் வடித்துள்ளார். இனியாவது தமிழர்கள் விழித்துக் கொண்டு, அறிவியல் மொழியாகத் தமிழை வளர்க்க முற்படாவிட்டால் தமிழ் வளர்ச்சி என்பது தேய்பிறை யாகப் போய் விடும் என்பது அவரது அச்சம்.

அறிவியல் பார்வை அன்றும் இன்றும்

அறிவியல் வளர்ச்சிக்கான மற்றொரு ஆக்கக்கூறு மக்க ளிடையே முகிழ்த்தெழ வேண்டிய அறிவியல் பார்வையும் அறிவியல் அணுகு முறையுமாகும்.

சமயச் சார்பு குறைவாக இருந்த சங்கத் தமிழர்களிடம் இப் பண்பு ஓரளவு சிறப்பாக இருக்கவே செய்தது என்பதை இலக் கியங்கள் மூலமும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் வாயிலாகவும் நம்மால் அறிந்துணர முடிகிறது.

பிற்காலத்தில் சமயச் சூழலுக்கு முற்றிலும் ஆட்பட்ட தமிழர் களிடம் இப் பண்பு குன்றியதோடு, எதனையும் இதிகாச புராண அடிப்படையில் நோக்கும் போக்கே வளர்ந்தது. இதனால் அவன் வளர்ச்சிப் பாதையில் ஏராளமான மேடு பள்ளங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அறிவியல் அணுகுமுறை, அறிவியல் பார்வை, ஆகிய வற்றின் சிறப்பான அடிப்படைத் தன்மையையும் வேறுபாட்டை யும் நுட்பமாக விளக்குகிறார் டாக்டர் வா செ. குழந்தைசாமி அவர்கள்.

'அறிவியல் அறிவு வேறு; அறிவியல் பார்வை வேறு. அறிவியல் துறையினர் அனைவருமே அறிவியல் பார்வை கொண்டவர்களல்ல. அத்துறையில் ஈடுபாடு கொள்ளாதவர்கள், அல்லது அதில் ஆழ்ந்த புலமை இல்லாதவர்கள் அனைவருமே அறிவியல் அணுகுமுறை இல்லாதவர்களல்ல.