பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37



பொதுவாக அறிவியல் உலகம் நம்பிக்கையின் அடிப்படையில் எதையும் ஏற்றுக் கொள்ளாத மரபையுடையது. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவியல் உலகின் அடிப்படை. கொள்கையாயினும் கோட்பாடாயினும், அவை முறையான வாதங்கட்கும் சோதனைகட்கும் உட்பட வேணடும். அவற்றின் அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். இது அறிவியல் உலகின் மரபு. இதனாலேயே பலர் அறிவியல் அணுகுமுறை என்பது சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை போன்ற உணர்வுகட்குப் புறம்பானது, எதிரானது என்று கருது கின்றனர். அறிவியல் பார்வை, அறிவியல் அணுகுமுறை என்பது ஒன்றை நம்புவதையோ நம்பாததையே பொறுத்து மட்டும் அமைவதல்ல மேலும், நம்புவது அனைத்தும் மடமையன்று. நம்பாமை மட்டுமே பகுத்தறிவு ஆகிவிடாது. எதை எதை எந்த அடிப்படையில் எந்த அளவிற்கு நம்புகிறோம் என்பதுதான் முக்கியம்.

'ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அதன் அணுகுமுறை’ எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் முழுமையாக உணர்வதில்லை. மேலை நாட்டினர் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் அடைந்த உயர்வுத்கும் வளர்ச்சிக்கும் அவர்களது அணுகுமுறையும் ஒரு முக்கியமான அம்சமாகும். வளர்ச்சிப் பாதையில் கதவுகள் அடைபடுவதும், திறப்பதும் பல சூழ்நிலைகளில் நமது அணுகுமுறையைப் பொறுத்தது.

சான்றாக, முதுமைப் பருவத்தை எடுத்துக் கொள்வோம். முதுமை என்பது எல்லா உயிர்கட்கும் இயற்கையான ஒன்று; அது எல்லோருக்கும் என்றும் தவிர்க்க முடியாதது; மனிதர்க்கு வயது நூறல்லதில்லை’ என்று கொள்வது ஒருவகையான அணுகு முறை. அதை விடுத்து முதுமை என்பது ஒரு நோய், அது எல்லா உயிர்கட்கும் பொதுவானது. இதுவரை அதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, அதற்கு எல் லோரும் பலியாகி வருகிறார்கள் என்றும் கருதலாம். இது மற்றொரு அணுகுமுறை. முதுமை ஒரு வகையான பிணி என்றவுடனேயே, அதை இதுவரை தீர்க்க முடியாவிட்டாலும் எதிர் காலத்தில் தீர்க்க வழிகாண முடியுமா என்ற கேள்வி உடனே எழுகிறது. முயல்வோம் என்ற முடிவுக்கு இடம் பிறக்கிறது. அந்த அடிப்படையில் இன்று முதியவர்கள் உடல், உள்ளப் பிரச்சினைகளைக் கவனிப்பதற்கென்றே ஒரு மருத்துவத்துறை உருவாகியிருக்கிறது மனித உடலின் பல உறுப்புக்கள் பழு தடைந்தால், சீர் செய்யவும், இயலாவிட்டால் செயற்கை உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் சேர்க்கவும் இயலும் என்ற