பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
43

ஆங்கிலமும் அறிவியலும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியல் விரைந்து வளரத் தொடங்கியது. ஆங்கிலேயர்களின் தாய்மொழியும் பாடமொழியும் அறிவியல் நுட்பச் செய்திகளை ஏந்திவந்த மொழியும் ஆங்கி? மாகவே அமைந்தது. அவர்களைப் பொருத்தவரையில் சர்க் கரைப் பந்தலில் தேன்மாரி பெழிந்தது போலாயிற்று.

தாய்மொழிவழி அறிவியல் அறிவு

தாய்மொழி மூலம் அறிவியலை படிக்கும் வாய்ப்பு ஏற்படுவ தன் மூலமே சிந்தனைத்திறமும் புதியன படைக்கும் வேட்கையும் அதற்கான ஆராய்ச்சி ஆற்றலும் பெருகமுடியும்.புதியன புனைய வேண்டும் என்ற வேட்கை அழுத்தமும் வலுவும் பெற இயலும்,

ஆங்கிலம் போன்ற மேற்குலக மொழிகளில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புத் தகவல்களைக் கூறும் ஆய்வுச் செய்திகள் பெரு மளவில் வெளிவந்த போதிலும் அவற்றை உடனுக்குடன் தங்கள் மொழியில் மொழியாக்கம் செய்து, அவ்வறிவியல் கல்வியைத் தத்தமது தாய் மொழி மூலமே கற்றதனால்தான் ரஷியாவும் ஜப் பானும் அறிவியல் துறையில் வளர்ந்தோங்கி செழிக்க முடிந்தது.

ஆங்கிலேயர் நம் நாட்டில் ஆதிக்கம் பெற்ற காலத்தில் ஆங்கில மொழியும் புதிது, அதன் வாயிலாக வந்த அறிவியல் செய்தியும் புதிது. ஆயினும் தங்கள் ஆட்சியின்கீழ் வாழும் மக்க ளுக்கு அறிவியல் கல்விதர விரும்பிய ஆங்கிலேயர் தங்கள் மொழி யாகிய ஆங்கிலம் மூலமே இந்நாட்டில் அறிவியல் கல்வியைப் போதிக்கலாயினர். இந்நிலையே பத்தொன்பதாம் நூற்றாண் டின் இடைக்காலம்வரை தொடர்ந்தது.

அதுவரை ஆங்கிலமொழியில் இருந்துவந்த அறிவியல் நுட்பச் செய்திகளைத் தாய்மொழியாகிய தமிழ் மொழி வாயிலாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேட்கையுணர்வு அக்கால கட்டத்தில் தான் முளை விடத் தொடங்கியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் மக்களின் கல்வி வளர்ச்சியிலும் அறிவுப் பெருக்கத்திலும் அக்கரை கொண்ட ஆட்சியினரும் கல்வியாளர்களும் கிருத்துவ சமய