பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44

44

அமைப்புகளும் அறிவு வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட தனிப் பட்ட பெரியார்களும் தமிழ் மொழி மூலம் கல்வியை, அறிவிய லைப் பரப்பும் வழிபற்றி முனைப்புடன் சிந்திக்கலாயினர்.

தமிழில் அறிவியலைச் சொல்ல பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிருந்தது.

முதலாவது, பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் இளம் மாணவர்களுக்கேற்ற முறையில் பாடத்திட்டத்தை அடியொற் றித் தமிழில் அறிவியல் பாடங்களை எழுதி வழங்க வேண்டும்.

இரண்டாவது, அதே அறிவியல் செய்திகளைப் பொது மக்கள் விரும்பிப் படித்துத் தெளிவு பெறும் வகையில் கட்டுரை வடிவிலும் கதைப் போக்கிலும் சுவாரசியமாகச் சொல்லும் வகை யில் தருதல் வேண்டும்.

இந்த அடிப்படையில் ஆங்கில அறிவியல் நூல்கள் மொழி யாக்க வடிவாகவும், மூலநூல் படைப்பாகவும் உருவாக்கப் பட்டன.

தமிழ் பயிற்சி மொழி

இந்நிலை 1880 ஆம் ஆண்டுவாக்கில் வேகமும் விறுவிறுப் பும் அடையத் தொடங்கியதெனலாம். இந்த ஆண்டில்தான் தாய்மொழியாகிய தமிழ் மூலம் சிறுவர்கட்குப் பாடம் புகட்டும் "தமிழ் பயிற்சி மொழித்திட்டம் ஆட்சியாளர்களாலும் கல்வித் துறையினராலும் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் வகுப்பி லிருந்து எட்டாம் வகுப்புவரை தமிழே பயிற்சி மொழியாக்கப் பட்டது. பாடமொழி தமிழாகியதால் அதற்கிணங்க பாடநூல்கள் தமிழில் எழுத வேண்டிய இன்றியமையாத் தேவை ஏற்பட்டது.

தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடும் முயற்சியே மேற் கொள்ளப்பட்ட து.

முதல் அறிவியல் மாத இதழ்

அறிவியல் தமிழாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அம்முயற்சிக்கு மேலும் வலுவூட்டும் முறையில் 1981இல் 'தமிழ் மேகசின்' எனும் பெயரில் தமிழ் மாத இத ழொன்று வெளிவரத் தொடங்கியது. இவ்விதழில் அறிவியல் செய்திகள் பல வெளியிடப்பட்டன. தமிழில் அறிவியலைச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற இவ்விதழ் வெளி பீடு பேருதவியாய் அமைந்ததெனலாம்.