பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45

தமிழில் அறிவியல் நூல்கள்

அடுத்த ஆண்டிலேயே 1882இல் ஆங்கில அறிவியல் நூலை அடியொற்றி இரேனியஸ் பாதிரியார் பூமி சாஸ்திரம்' எனும் பெயரில் பூகோள நூல் ஒன்றைத் தமிழில் எழுதி வெளி யிடடார்.

அதனைத் தொடர்ந்து பூமி சாஸ்திரச் சுருக்கம்', 'பூமி சாஸ்திரப் பொழிப்பு', 'பூமி சாஸ்திரப் பாடங்கள்' ஆகிய நூல் கள் 1846 வரை தமிழாக்கமாகத் தமிழில் வெளிவந்தன.

இக்கால கட்டத்தில் பள்ளியளவில் பயன்படுத்தத்தக்க அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிடுவதில் 1850-க்கும் முன்னதாக உருவாக்கப்பட்ட சென்னைப் பாட சாலை புத்தகச் சங்கம்' 1854ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 'தென்னிந்திய கிருத்துவப் பாடசாலைப் புத்தகச் சங்கம்' ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.

அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்யும் முயற்சிக்குப் பெரும் உந்து சக்தியாக அமைந்தவர் 1848ஆம் ஆண்டில் இலங்கைக்கு மருத்துவத்துறை ஆசிரியராகவந்த டாக்டர் ஃபிஷ் கிரீன் ஆவார். தமிழில அறிவியல் பாடத்தை, குறிப்பாக மருத் துவப் பாடத்தைப் போதிக்கும் முயற்சியைத் தொடங்கி வைத்தவரே அவர் தான்.

தமிழில் முதல் கணித நூல்

முதன் முறையாகச் சில கணித நூல்கள் 1849 ஆம் ஆண்டின் துவக் கமுதலே வெளிவந்தன. இவ்வகையில் வெளி வந்த முதல் நூல் 'பால கணிதம்' எனும் நூலாகும். இஃது இலங்கையிலிருந்து வெளிவந்தது. இக் கணித நூல் முழுமையான மொழி பெயர்ப்பாக அமையாமல் ஆங்கிலக் கணித முறைகளின் சிறப்பியல்புகளும் தமிழ்க் கணித முறையின் சிறப்புக் கூறுகள் சிலவும் இணைந்த முறையில் வெளிவந்தது 179 பக்கங்களைக் கொண்ட இந்நூல் மூலநூலாகத் தமிழில் எழுதப்பட்ட கணித நூல் எனும் தோற்றத்தையுடையதாக வெளிவந்தது

அடுத்து 1855இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரோல், விஸ்வநாதன் என்பவர்கள் அல்ஜீப்ரா கணிதத்தைத் தமிழில் "இயற் கணிதம்' என்ற பெயரிலும் 'வீச கணிதம்' என்ற பெயரிலும் தமிழ் வடிவில் வெளியிட்டனர்.